வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

போலீஸ் ஸ்டேஷனில் நந்தினிக்கு நேர்ந்த கொடுமை.. ட்ராக் மாறி போகும் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலுக்கு வரலாறு காணாத வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது சீரியலின் போக்கு ட்ராக் மாறி இருப்பது ரசிகர்களை கொஞ்சம் அல்ல ரொம்பவே சோதித்து வருகிறது. அதிலும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ சிறு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

குணசேகரனின் சூழ்ச்சியால் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் நான்கு மருமகள்களும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அதில் பெண் போலீஸ் நந்தினி, ரேணுகா இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று அழைத்துச் செல்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க பெண்களை வெளியில் கொண்டு வருவதற்காக சக்தி, கதிர், ஞானம், தர்ஷன் என அனைவரும் போலீஸ் ஸ்டேஷனிலேயே தவம் கிடைக்கின்றனர். அப்பொழுது நந்தினியை பார்க்கும் கதிர் மட்டுமல்லாமல் ரசிகர்களாகிய நாமும் நொந்து தான் போகிறோம்.

Also read: முத்துவின் பேச்சால் சூனியக்காரி ஆக மாறப்போகும் ஸ்ருதி.. இந்த விஷயத்துல எஸ்கேப் ஆன மீனா

போலீஸ் விசாரணையில் பலத்த காயத்துடன் வெளிவரும் நந்தினியை பார்த்து துடித்துப் போகும் கதிர் அவரை கை தாங்கலாக அழைத்துச் செல்வது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ஆடியன்ஸ் இந்த வீட்டு பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி சோதனை வருகிறது? என குமுறி வருகின்றனர்.

தர்ஷினியை தேடுவதை விட்டுவிட்டு இப்படி கதையை வேற ரூட்டுக்கு கொண்டு செல்லும் டைரக்டரையும் ஆடியன்ஸ் திட்டி தீர்க்கின்றனர். இதன் மூலம் இயக்குனர் என்ன சொல்ல வருகிறார்? ஆணாதிக்கத்திற்கு கொடி பிடிக்கிறாரா? அல்லது எதிர்நீச்சல் பெண்களை கௌரவப்படுத்துகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: கதிர், ராஜி திருமணத்தால் நிலை குலைந்து போன குடும்பம்.. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கமாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

Trending News