எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு நாளும் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டிக் ரசிக்க வைக்க கூடியவர் அந்த வீட்டின் மருமகள்கள் தான். அவர்கள் என்னதான் குணசேகரன் இடம் அமைதியாக இருந்தாலும் அவரை தாளித்து எடுக்கும் பேவரைட் இடமாக வைத்திருப்பது அவர்களுடைய கிச்சன் மட்டுமே. அந்த மருமகளில் பிரச்சனைகளை அனைத்தையும் ஈசியாக ஹேண்டில் பண்ற ஒரே கேரக்டர் என்றால் அது நந்தினி மட்டுமே. என்ன தான் கதிர் அடிச்சாலும், மிதிச்சாலும் துடைச்சு போட்டு அடுத்த வேலையை பார்க்கக் கூடியவர். அதற்கு காரணம் அவருடைய நிஜ வாழ்க்கையிலும் சந்தித்த குணசேகரன் மாதிரி ஆட்கள்தான்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ரொம்பவும் மனசை கலங்கடிக்கும் வகையில் உருக்கமாக பேசியிருக்கிறார். அதாவது இவர் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்த பிறகு டைரக்ஷனில் அதிகம் ஈடுபாடு இருந்ததனால் அது சம்பந்தமான விஷயங்களை கற்றுக் படித்திருக்கிறார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் ஆடிஷனுக்கு அப்பா, அம்மா கட்டாயத்தினால் கலந்து இருக்கிறார்.
Also read: குணசேகரனுக்கு சரியான ஆளு ஜான்சி ராணி தான்.. அப்பத்தாவின் சொத்தை ஆட்டை போட்ட செம ஸ்கெட்ச்
ஆனால் இவருடைய லக் அதில் செலக்ட் ஆயிருக்கிறார். அந்த நேரத்தில் இருந்து தான் இவருடைய வாழ்க்கையும் மாறி இருக்கிறது. அதன் பின் கனா காணும் காலங்கள் நாடகத்திற்கு பிறகு ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு மற்றும் சன் டிவியில் பிரியமானவளே போன்ற சீரியல்களில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு கொஞ்சம் காலங்கள் குடும்ப வாழ்க்கையில் சில இக்கட்டான சம்பவங்கள் இருந்ததால் அதை சமாளிக்கவே அவருடைய முழு கவனமும் அதில் திரும்பி விட்டது. அதனால் கொஞ்ச காலங்கள் சீரியல் நடிக்காமல் இருந்திருக்கிறார். அதன் பிறகு தான் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
Also read: ஞானத்திடம் கெஞ்சி கூத்தாடிய குணசேகரன்.. ஆம்பளைங்களே இல்லையா என அசிங்கப்படுத்திய மருமகள்
முதலில் இதைப் பற்றி இயக்குனர் சொல்லும் போது நந்தினி என்கிற கேரக்டர் படிச்ச பொண்ணு, ஆனா எல்லாத்தையும் பட்டு பட்டுன்னு வெளிப்படையாக பேசும் யதார்த்தமான ஜாலியான அப்பாவி. இதை கேட்டதும் எனக்கு இந்த கதையோட ஒன்றி போகிற மாதிரி உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அனா அது எந்த அளவுக்கு செட் ஆகும் என்று தெரியல. இப்பொழுது வருகிற ரெஸ்பான்ஸ் பார்க்கும்பொழுது எனக்கு மனதளவில் சந்தோசத்தை ஏற்படுத்திகிறது என்று கூறியிருக்கிறார்.
இதற்கு அடுத்து குணசேகரன் பற்றி இவரிடம் கேட்டபோது நிஜ வாழ்க்கையிலும் நான் குணசேகரன் மாதிரி ஆட்களை சமாளித்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அத்துடன் அவரை மாதிரி ஒரு ஆளு உங்க வாழ்க்கையில் இல்லைனா நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வச்சவர்கள் என்று கூறி இருக்கிறார். அப்படியே அவர்கள் மாதிரி ஆட்கள் இருந்தாலும் நாம் எல்லாத்தையும் கடந்து போராடி வரவேண்டும் என்று மிகவும் உருக்கமாக பேசி இருக்கிறார்.
Also read: 40% ஷேர்க்கு ஆதிரையை அடமானம் வைக்கும் குணசேகரன்.. அப்பத்தாவின் முடிவு என்னவாக இருக்கும்