வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கீ கொடுத்த பொம்மை போல் தர்ஷினி தந்த வாக்குமூலம்.. பின்னால் இருக்கும் மர்மம், விறுவிறுப்பாகும் எதிர்நீச்சல்

Ethirneechal: கடந்த சில வாரங்களாகவே எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி காணாமல் போன பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் கோர்ட் கேஸ் என அழைக்கப்பட்ட குணசேகரன் வீட்டு மருமகள்கள் தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கின்றனர்.

ஆனால் தன்னை கடத்தியது அம்மா ஈஸ்வரி தான் என தர்ஷினி கொடுத்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஈஸ்வரிக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் ஜீவானந்தம் ஜனனியிடம் ஒரு விஷயத்தை கூறி இந்த வழக்கை பரபரப்பாக்குகிறார்.

அதாவது இந்த பிரச்சனையை சிஎம் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் நிச்சயம் உதவி கிடைக்கும் என்று கூறுகிறார். இதனால் தற்போது சீரியல் விறுவிறுப்பாக மாறி இருக்கிறது. இனி வரும் எபிசோடுகளில் ஜனனி தர்ஷினியை கண்டுபிடிப்பதற்கான வேலைகளை செய்ய இருக்கிறார்.

Also read: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை தான்.. மீண்டும் சிக்கலில் மாட்டி தவிக்கும் பாக்யா

ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தர்ஷினி கீ கொடுத்த பொம்மை போல் தந்த வாக்குமூலம் தான். யாருக்கோ பயந்து அவர் பேசியது வெளிப்படையாக தெரிந்த நிலையில் நீதிபதிக்கு அது தெரியாமல் போனது ஆச்சரியம் தான்.

இருந்தாலும் தர்ஷினியை பின்னால் இருந்து இயக்குவது யார்? கடத்தலின் பின்னணி என்ன? குணசேகரனுக்கு இதில் என்ன பங்கு இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கான விடைகள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. இதன் மூலம் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் ஜனனி தர்ஷினியை எங்கிருந்தோ யாரோ தூண்டி விடுகிறார்கள். அது யார் என்ற ட்விஸ்ட் வைக்கிறார். இப்படி சஸ்பென்சை அதிகரித்திருக்கும் இயக்குனர் ரொம்ப நாள் இந்த கேசை இழுக்காமல் முடிக்க வேண்டும் எனவும் ஆடியன்ஸ் கூறி வருகின்றனர்.

Also read: தர்ஷினியின் வாக்குமூலத்தால் நடந்த திருப்பம்.. குணசேகரனுக்கு முடிவு கட்ட ஈஸ்வரி நகத்தும் காய்

Trending News