திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த சோதனை.. கிடப்பில் போடப்பட்ட 7 விஷயங்கள்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஆரம்பித்த கதை தற்போது எங்கெங்கோ திரும்பிக்கொண்டு நாளா பக்கமும் புதுசு புதுசாக ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. அதாவது கதைப்படி குணசேகரனின் கொட்டத்தை அடக்கி, பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் விஷயங்களை தூக்கி எறிந்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் அதற்கேற்ற மாதிரி எந்த ஒரு விஷயமும் தற்போது வரை நகராமல் இருக்கிறது. அதற்கு பதிலாக நாச்சியப்பன் குடும்பத்தை புதுசாக கொண்டு வந்து அவர்களின் கொடூரத்தனத்தை காட்டுவது. ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் தேவையில்லாத ஒரு கதாபத்திரமாக அந்த வீட்டில் அழிச்சாட்டியம் பண்ணுவது. இதுபோன்ற பிரச்சனைகளை மையமாக காட்டப்படுகிறது.

அதனால் எதிர்நீச்சல் சீரியலில் கிடப்பில் போடப்பட்ட விஷயங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம். ஜனனி பிசினஸ் விஷயத்தில் எந்த ஒரு முயற்சியும் எடுத்து வைக்கவில்லை. அத்துடன் குணசேகரனின் மனைவி ஈஸ்வரி கல்லூரியில் பேச்சாளராக இருந்த விஷயம் அப்படியே பாதியிலேயே நிறுத்தியாச்சு. ரேணுகா பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் விஷயத்தை மறந்து மறுபடியும் சமையல்கட்டில் வேலைக்காரியாக இருக்கிறார்.

Also read: ஜனனி அப்பாவை விட குணசேகரன் எவ்வளவோ பரவாயில்லை.. ஆட்டத்தை கலைக்க வரும் வாசு

நந்தினி சமைச்சு கொடுக்கும் பிசினஸை ஆரம்பித்து அதுவும் பாதியிலேயே முடக்கப்பட்டு விட்டது. இப்படி இந்த நான்கு பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, சொந்தக்காலில் அடி எடுத்து வைக்க வேண்டும் என்ற கனவு சுக்கு நூறாக உடைந்து போய்விட்டது. அத்துடன் இந்த நான்கு மருமகளுக்கு ஒரு மோட்டிவேஷன் கொடுத்த அப்பத்தாவின் நிலைமை என்னவென்று தெரியாமல் இருக்கிறது.

ஆதிரை வீட்டை விட்டு போயி அருணை கல்யாணம் பண்ண வேண்டும் என்ற ஒரு விஷயத்தையே மறந்து விட்டார்கள். அப்பத்தா இறப்பிற்கு ஜீவானந்தம் தான் காரணம் என்று போலீசார் அவரை அரெஸ்ட் பண்ணியது, அந்த கேசும் என்ன என்று தெரியாமல் பாதியிலேயே இருக்கிறது. ஆக மொத்தத்தில் எதிர்நீச்சல் என்ற பெயருக்கு பதிலாக எரிச்சல் நீச்சல் என்று வைத்திருக்கலாம்.

அந்த அளவிற்கு இந்த நாடகத்தை மக்கள் வெறுத்துக் கொண்டு வருகிறார்கள். தற்போது தர்ஷினியை ஒரு கும்பல் கடத்திட்டு போயிருக்கிறார்கள். அதனால் குணசேகரன், தர்ஷினி நண்பர் ஒருவர் மீது சந்தேகப்பட்டு அங்கே போய் சம்மந்தமே இல்லாமல் பிரச்சினை செய்து வருகிறார். மேலும் தற்போது இவர்கள் அனைவரும் தர்ஷனியை தேடும் விஷயத்தை வைத்து ஒரு வாரத்திற்கு இழுத்தடித்து விடுவார்கள்.

Also read: தம்பிக்கு பாசத்தைக் காட்டி தூபம் போடும் குணசேகரன்.. சக்தியை போல் ரெமோவாக மாறிவரும் கதிர்

Trending News