செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் செய்த எதிர்நீச்சல்.. காரி துப்புவதால் டிஆர்பி-யும் போச்சு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலை பார்த்த பலருக்கும் துக்கம் தொண்டையில் அடைக்கிற அளவுக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். இந்த ஒரு சீரியல் தான் ஆகோ ஓஹோ என்று பலரும் பாராட்டி வந்த நிலையில் மொத்தமாக இந்த நாடகத்துக்கு குழி தோண்டி புதைத்த மாதிரி நிலைமை ஆகிவிட்டது.

ச்சீ கன்றாவி என்ன மோசமான கதை என்று காரி துப்பி வருகிறார்கள் இந்த நாடகத்தை பார்த்தவர்கள். இதை பார்ப்பதற்கு விஜய் டிவியில் உள்ள நாடகம் எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு கதை இருக்கிறது. இந்த நார பய கல்யாணத்துக்காகவா நாலு மாதமா ஜவ்வு மாதிரி இழுத்துகிட்டு இருந்தாங்க.

Also read: உண்மையை மறைக்கும் தனம், மீனா.. செண்டிமெண்ட் சீனயை வைத்து உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த கருமத்தை அப்பவே பண்ணி தொலைத்து இருக்க வேண்டியதுதானே. இதுல வேற ஜீவானந்தம் கேரக்டருக்கு ஓவரா பில்டப் கொடுத்தது. அவர் தான் இருப்பதிலேயே வெத்து வேட்டு. நாடகத்தில் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் மட்டமான ஒரு ஆளாக மாறிவிட்டார். மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறவர் குணசேகரன் அல்ல இந்த நாடகத்தின் இயக்குனர் தான்.

அது எப்படி ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி கொடுமையான கல்யாணத்தை பண்ணி வைத்து அதையும் முறைப்படி ரிஜிஸ்டர் பண்ணி வைக்கிறீங்க. இது என்ன ஒரு நாடகமாக இருந்தாலும் கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா? ஆக மொத்தத்தில் இந்த நாடகத்தின் மேல் இருந்த எதிர்பார்ப்பும் ஒத்த தாலியால பாழாகிவிட்டது.

Also read: தாலி சென்டிமென்ட் வைத்து உருட்டும் விஜய் டிவி.. புரட்சி செய்யும் எதிர்நீச்சல்

விஜய் டிவியில் அஞ்சு வருஷமாக பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்னும் சில நாடகங்கள் ஓடிய நிலையில் கூட இந்த அளவிற்கு யாரும் பார்த்துக் கொந்தளித்துப் போகவில்லை. ஆனால் எதிர்நீச்சல் சீரியலை பார்த்து இந்த இரண்டு நாளிலே ச்சீ என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது.

இதுவரை பார்த்தவர்கள் இனிதே கும்பிடு போட்டுவிட்டு எதிர்நீச்சல் நாடகத்தை தலை மூழ்கி விட்டார்கள். தயவு செய்து இந்த நாடகத்தை மேற்கொண்டு தொடராமல், முடித்துவிட்டால் இருக்க கொஞ்ச நஞ்ச பெயராவது மிச்சமாகும்.

Also read: குணசேகரன் உருவானது எப்படி.? எதிர்நீச்சல் ஷாக்கிங் சீக்ரெட்டை உடைத்த திருச்செல்வம்

Trending News