வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சக்தியின் நடிப்பை தூக்கலாக காட்டி குணசேகரனை டம்மியாக்கிய எதிர்நீச்சல்.. டிஆர்பிக்காக எடுத்த முயற்சி

Ethirneechal Serial: சன்டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், கடந்த சில நாட்களாக குணசேகரன் கேரக்டர் பெருசாக காட்டப்படவில்லை. அதனால் தான் என்னமோ தற்போது சீரியலை பார்ப்பதற்கு ரொம்பவே சுவாரசியமாகவே இருக்கிறது. முக்கியமாக சக்தியின் நடிப்பை தூக்கலாக காட்டி ஒரு ஹீரோக்கு உண்டான நடிப்பை பார்க்க முடிகிறது.

இதுவும் நல்லாதான் இருக்கிறது என்பதற்கு ஏற்ப மக்கள் விறுவிறுப்பாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் ஆதிரையும் இத்தனை நாளாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். ஆனால் பொருத்தது போதும் பொங்கி எழலாம் என்று குணசேகருக்கு எதிராக எல்லா விஷயத்தையும் திரும்பி விட்டார். அதற்கு முதல் படிக்கட்டாக அருணுக்கு ஏற்பட்ட விபத்து குணசேகரன் தான் காரணம் என்கிற விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து குணசேகரன் வீட்டிற்கு வந்த ஆதிரை சர்டிபிகேட் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் கதிர் வழக்கம் போல் ஆதிரையை வாய்க்கு வந்தபடி பேசி வானத்துக்கும் பூமிக்கும் குதித்து துள்ளுகிறார். பிறகு சாரு பலவையும் மரியாதையில்லாமல் பேச ஆரம்பித்து விடுகிறார். ஆனால் இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்ததுனால் சாரு பாலா குணசேகரன் வீட்டிற்கு வரும் பொழுது போலீசை கூட்டிட்டு வந்திருக்கிறார்.

Also read: மண்ணு மாதிரி வாயை மூடிட்டு இருக்கும் பாக்கியாவின் மருமகள்.. ஓவராக துள்ளி குதிக்கும் சைக்கோ

அதன் பின் போலீஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகு கதிர் கொஞ்சம் அடங்கி சர்டிபிகேட்டை ஆதிரை இடம் திருப்பிக் கொடுத்து விடுகிறார். அடுத்தபடியாக தர்ஷினியை வம்பு இழுக்கும் விதமாக ஜான்சி ராணி நடுரோட்டில் பிரச்சனை செய்கிறார். அத்துடன் கரிகாலனும் தர்ஷினியை எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் பேசுகிறார்.

இதனை சமாளிக்க முயற்சி பண்ணிய தர்ஷினியை கடைசியில் ஜான்சி ராணி வலுக்கட்டாயமாக பைக்கில் உட்கார வைக்கிறார். அந்த நேரத்தில் தர்ஷன் வந்து தர்ஷினையை காப்பாற்றி கூட்டி போய்விடுகிறார். பிறகு வீட்டிற்கு போன தர்ஷன் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னதும் ஜான்சி ராணியை ஈஸ்வரி ஓங்கி கன்னத்தில் அடித்து விடுகிறார்.

அத்துடன் கரிகாலனும் நான் தர்ஷினியை கூட்டிட்டு போய் கண்டிப்பாக கல்யாணம் பண்ணுவேன் என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பேசுகிறார். இதனால் கோபப்பட்ட சக்தி, கரிகாலனை நல்லா வெளுத்து வாங்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். ஆக மொத்தத்தில் ஜான்சி ராணியும் கரிகாலனும் அடி வாங்குவதற்கு இந்த வீட்டில் குடி இருக்கிறார்கள். இப்படி சக்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் தற்போது பழையபடி டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து விட்டது.

Also read: சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி

Trending News