ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

வைரலாகும் இளம் வயது ஜீவானந்தம், ஈஸ்வரி காதல் புகைப்படம்.. கதறி அழும் குணசேகரன் பொண்டாட்டி

Ethirneechal Serial: சமீபத்திய சீரியல்களில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருப்பது எதிர்நீச்சல் தான். 40 சதவீத சொத்துக்களை ஜீவானந்தத்திடம் பறி கொடுத்த குணசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லா குரங்குத்தனமான வேலைகளையும் செய்து வில்லத்தனத்திலும் சீரியல் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அடக்கு முறையால் தங்களுடைய சொந்த திறமைகளை எல்லாவற்றையும் இழந்து விட்டு வீட்டு அடுப்பங்கரையில் முடங்கி கிடந்த விசாலாட்சியின் மருமகள்கள் இந்த சொத்து போன சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டு தங்களை நிரூபிக்கவும் தொடங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் ரேணுகாவுக்கு பள்ளியில் நடன ஆசிரியை வேலை கிடைத்திருக்கிறது.

Also Read:இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருக்கும் டாப் 6 சீரியல்கள்.. புது வருகையால் திணறும் டாப் டிவி சேனல்கள்

அதே நேரத்தில் பல மாதங்களாக யார் இந்த ஜீவானந்தம் என்று மக்கள் மனதில் மிகப்பெரிய கேள்வி ஒன்று இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் இந்த ஜீவானந்தம் ஈஸ்வரியின் முன்னாள் காதலராக இருக்க கூடுமோ என சீரியல் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வந்து, எப்போது இந்த உண்மை உடையும் என காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த கேள்விக்கு பதில் ஜீவானந்தமே சொல்லியிருக்கிறார்.

ஈஸ்வரி முதன் முதலில் ஜீவானந்தத்திடம் போனில் பேசும் பொழுதே இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு கதை இருக்கிறது என்ற சந்தேகம் வந்தது. தற்போது ஈஸ்வரி இருக்கும் இடத்தை தேடி வந்த ஜீவானந்தம் அவரிடம் பேச முயற்சி செய்யும் பொழுது ஈஸ்வரி தன் வீட்டில் இருக்கும் பிரச்சனைக்கு எல்லாம் இவர்தான் காரணம் என கோபப்படுகிறார். அப்போதுதான் ஜீவானந்தம் தான் யார் எனும் உண்மையை அவரிடம் சொல்கிறார்.

Also Read:ஈஸ்வரியை வைத்து டீல் பேசும் குணசேகரன்.. கம்பெனி எனக்கு பொண்டாட்டி உனக்கு

ஈஸ்வரியை காதலிக்கும் ஜீவானந்தம் அவருடைய அப்பாவிடமே நேரில் சென்று பெண் கேட்கிறார். ஆனால் ஈஸ்வரியின் அப்பா அதை மறுத்துவிட்டு, ஆதி குணசேகரனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார். இதை ஞாபகப்படுத்தும் ஜீவானந்தம், ஈஸ்வரியிடம் அந்த ஈஸ்வரிக்கு இந்த அளவுக்கு கோபம் என்பதே வராது என ரொம்பவும் சோகமாக சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.

வைரலாகும் இளம் வயது ஜீவானந்தம், ஈஸ்வரி காதல் புகைப்படம்

ஜீவானந்தம் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு ஈஸ்வரி தன்னுடைய பழைய வாழ்க்கையை ஞாபகப்படுத்தி பார்க்கிறார். அதில் இள வயது ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தத்தை ஒரு சில காட்சிகளில் காட்டுகிறார்கள். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

Also Read:ஆணவத்தில் ஆடின குணசேகரனை தும்சம் செய்த ஜீவானந்தம்.. ஜனனி ஷாக், கௌதம் என்டரி வேற லெவல்

 

Trending News