Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் வியாபார சங்கத்தின் சார்பாக எலக்ஷனில் நிற்கப் போவதாக இருந்தது. ஆனால் சாருபாலா நிற்கிறார் என்றதும் இவருக்கு எதிராக தன் மனைவி ஈஸ்வரியை தேர்தலில் நிப்பாட்டினார். அதன் பின் சாருபாலா வாபஸ் வாங்கியதும் ஈஸ்வரியை வாபஸ் வாங்கச் சொன்னார் குணசேகரன்.
ஆனால் ஈஸ்வரி என்னால வாங்க முடியாது நான் எலக்ஷனில் நிற்பேன் என்று குணசேகரனுக்கு எதிராக நிற்க துணிந்து விட்டார். இதனால் ஒரே வீட்டில் எதிரி எதிராக புருஷன் பொண்டாட்டி எலக்ஷனில் நிற்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இது வெறும் வியாபாரத்தில் நடக்கும் எலக்சன் தான். அதற்காக வார்டு எலக்சன் மாதிரி தெரு தெருவாக போய் ஓட்டு கேட்டு வருவது கொஞ்சம் லாஜிக் இல்லாமல் இருக்கிறது.
இருந்தாலும் தற்போதைய அரசியலில் என்ன நடக்கிறது, மக்கள் அதில் எந்த மாதிரியான சூழலில் இருக்கிறார்கள், என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக எதிர்நீச்சலில் உள்ள மொத்த டீமும் அவர்கள் பக்கத்தில் இருந்து ஏதோ ஒரு நல்ல விஷயத்தை கொண்டு வருகிறார்கள். அதுவும் இப்பொழுது தேர்தல் சமயத்தில் இந்த மாதிரி காட்சிகள் அமைப்பது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.
Also read: தன்னோட பொண்ண பழிகாடாகும் குணசேகரன்.. எதிர்நீச்சல் போட தயாரான ஈஸ்வரி
அத்துடன் அரசியலில் எந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் நடக்கிறது என்பதற்கு உதாரணமாக குணசேகரன் அருவாள் சின்னத்திற்காக ஓட்டு கேட்கும் போது மக்களுக்கு 1000ரூபாய் கொடுத்து கேட்கிறார். அத்துடன் இதை பொறுப்பேற்கும் ஜான்சி ராணி, குணசேகரனிடம் இருந்து கொஞ்சம் பணத்தை சுருட்டிக்கொண்டு மக்களிடம் கொடுத்தாச்சு என்று சொல்ற விஷயங்கள் நாடாளுமன்றத் தேர்தலையே மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது.
ஆனாலும் நேர்மையான முறையில் நாங்கள் ஜெயிக்க வேண்டும் என்று இன்னொரு பக்கம் ஈஸ்வரி மற்றும் ஜனனி ஒவ்வொரு வீடாக போயி ஓட்டு கேட்டு வருகிறார்கள். போன இடத்தில் ஒரு பாட்டிமா நாங்கள் உங்களுக்கு ஓட்டு போட வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு என்ன தருவீர்கள் என்று கேட்கிறார். ஏற்கனவே குணசேகரனுக்கு ஓட்டு போடுவதாக ஆயிரம் ரூபாய் வாங்கிட்டேன். தற்போது உங்களுக்கு போட வேண்டுமென்றால் 2000 ரூபா கொடுங்க நான் போடுறேன் என்று சொல்கிறார்.
அதற்கு ஜனனி, நீங்கள் கேட்கிற காசு உங்களுடைய பணமாக இருந்தாலும், ஓட்டுக்காக நீங்கள் வாங்கி விட்டீர்கள் என்றால் அடுத்து அவர்களிடம் எந்த ஒரு நியாயத்தையும் கேட்டு நிற்க முடியாது என்று பாயிண்ட் பாயிண்டாக சொல்லி மக்களுக்கு ஒரு கருத்தை தெரிவிக்கிறார். இந்த விஷயங்கள் அனைத்தும் மக்களுக்கும் தெரியும், ஆனாலும் பணத்தை கண்டால் இப்படித்தான் ஓட்டுக்கு விலை போவார்கள் என்று முட்டாள்தனமாக நம்பி குணசேகரன் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Also read: நாளா பக்கமும் அடிவாங்கும் குணசேகரன்.. எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற முறையில் கூட்டு சேர்ந்த வில்லன்