Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனுக்கு எங்கே நம்மளை மீறி இந்த மருமகள்கள் விட்ட சவாலில் ஜெயித்து விடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டது. அதனால் கமுக்கமாக இருந்த குணசேகரன் தற்போது எதற்கெடுத்தாலும் குதிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் ஞானம் பணத்தை கடனாக வாங்கிய நிலையில் அதற்கு ஓவராக காட்டம் காட்டினார்.
இதனை சமாளிக்கும் விதமாக நந்தினி ரேணுகா பேசிட்டு வந்த நிலையில் பரதநாட்டியம் சொல்லிக் கொடுப்பதாக முடிவு எடுத்து இருக்கிறார். இதை கேட்ட குணசேகரன் புருஷன் பட்ட கடனை அடைக்க பொண்டாட்டி கடன் கொடுத்த வீட்டில் ஆடிட்டு வருவது எப்படி இருக்கும் என்று நக்கலாக கிண்டல் அடிக்கிறார்.
ஆதிரை கல்யாணத்தில் நடக்கப் போகும் சம்பவம்
அது மட்டும் இல்லாமல் ரேணுகா கேரக்டரை அசிங்கப்படுத்தும் விதமாக கொச்சையாக பேசுகிறார். இதைக் கேட்ட ஞானம் கன்னத்தில் இரண்டு அடி குணசேகரனுக்கு கொடுத்திருந்தால் ரொம்பவே சந்தோஷமாக இருந்திருக்கும். ஆனால் எப்போதும் போல ஞானம் உப்புக்கு சப்பனையாக பேசி சப்பக்கட்டிவிட்டார்.
இதனை தொடர்ந்து ஜனனி வேலை பார்க்கும் கம்பெனியில் சக்தியும் புகுந்து விட்டார். இனி புருஷன் பொண்டடியாக ஒரே இடத்தில் வேலை பார்த்து படிப்படியாக முன்னேறுவது போல் அமையப் போகிறது. அதே மாதிரி நந்தினியும் மிளகாய் பொடி கம்பெனி ஆரம்பித்து உருப்படற வழியே பார்த்து விடுவார்.
தற்போது ரேணுகாவிற்கும் பரதநாட்டியம் கிளாஸ் முடிவாகிவிட்டது. இப்படி ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெளிச்சமாகி கொண்டு வரும் வேளையில் ஆதிரையின் கல்யாண சம்பவம் நடக்கப் போகிறது. அதற்காக அருண் வெளிநாட்டிலிருந்து வருவதாக காட்டப்படுகிறது. இவர்களுடைய கல்யாணத்தை குணசேகரன் தடுக்கும் விதமாக ஏதாவது குளறுபடி பண்ணுவார்.
ஆனால் அதிலும் தோற்றுப் போய் கடைசியில் செல்லா காசாக நிற்கப் போகிறார். அந்த வகையில் ஆதிரை மற்றும் அருண் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இதுதான் குணசேகரனுக்கு விழுகிற அடியாக மொத்தக் கொட்டத்தையும் அடக்க சந்தர்ப்பமாக இருக்கப் போகிறது. மேலும் ஆதிரை கல்யாணத்தை கிளைமாக்ஸ் காட்சிகளாக கொண்டுவர எதிர்நீச்சல் டீம் முடிவு எடுத்து விட்டார்கள்.
அந்த வகையில் ஜூன் 8ம் தேதி கிளைமேக்ஸ் காட்சி வைத்து எதிர்நீச்சல் மொத்த டீமுக்கும் பூசணிக்கா உடைத்து சுபம் போடப் போகிறார்கள். இந்த அவசர முடிவுக்கு காரணம் டிஆர்பி ரேட்டிங்கில் பின்னடைவு அடைந்ததாகவும் கதை சுவாரஸ்யமாக இல்லாமல் மக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியதனால் எடுத்த முடிவாக கருதப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள்
- வார்த்தையிலேயே அருவருப்பான வக்கிரத்தை கக்கும் குணசேகரன்
- குணசேகரன் நடத்திய அரங்கேற்றத்தில் சிக்கிய மட சாம்பிராணி
- உதவாக்கரை தம்பிகளால் அட்டூழியம் பண்ணும் சர்வாதிகாரி