புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லாஜிக்கே இல்லாமல் சொதப்பலாக போகும் எதிர்நீச்சல்.. நேருக்கு நேராக மோதும் ஜீவானந்தம் குணசேகரன்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் “வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம்”. இந்த பழமொழிக்கு ஏற்ப ஆரம்பித்ததில் இருந்து ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடி வந்த நிலையில், போகப் போக கதையே மாறிக்கொண்டு வருகிறது. அதிலும் அந்த வீட்டில் இருக்கும் படித்த மருமகள்கள் பேச்சு மட்டும் தான் கெட்டிக்காரத்தனமாக இருக்கிறது.

இவர்கள் செயல்கள் அந்த அளவுக்கு சொல்லிக்கும்படியாக எதுவும் இல்லை. அந்த வகையில் நேற்று ஆதிரையை, மாடியில் இருந்து கதிர் மற்றும் குணசேகரன் கூப்பிட்ட போது நந்தினி ஆதிரையை தடுத்து நீ மேலே போக வேண்டாம். என்ன தான் நடக்கும் என்று இன்னைக்கு பார்த்திடலாம், உன் மேல ஏதாவது கை மட்டும் வைக்கட்டும்,அதுக்கு அப்புறம் இங்க நடக்கிறதே வேற என்று கூறினார்.

Also read: எதிர்நீச்சல் குணசேகரனை வீடியோ வெளியிட்டு அசிங்கப்படுத்திய மீனாட்சியின் எக்ஸ் புருஷன்.. இந்த அவமானம் தேவையா?

இவர் சொல்வதைக் கேட்டு ஆதிரை போகாமல் இருந்ததால் கோபத்தில் கதிர் கீழே வந்து தரதரவென்று பிடித்து வெளியே துரத்தி விடுகிறார். ஆனால் இதெல்லாம் நடக்கும்போது நந்தினியால் வெறும் வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது. இதற்கு ஏன் அவ்வளவு பேசணும். சும்மா வாய மூடிட்டு இருந்தால் கூட ஆதிரையே ஏதாவது பேசி அவர்களை சமாளித்து அந்த வீட்டில் இருந்திருக்க வாய்ப்பு கூடும்.

இது கூட பரவாயில்லை, இன்னொரு விஷயம் பொறுத்தே கொள்ள முடியவில்லை. அதாவது ஆடிட்டர் குணசேகரன் வீட்டிற்கு வந்து சொத்து உங்களை விட்டு எல்லாம் போய்விட்டது. உங்க கம்பெனியில் ஜீவானந்தம் வந்து உங்க வேலை ஆட்களை எல்லாம் வெளியே துரத்தி விட்டார் என்று கூறுகிறார். இதைக் கேட்ட பிறகு கோபத்தில் குணசேகரன் அனைவரையும் கூட்டிட்டு ஆபீஸ்க்கு போய் விடுகிறார்.

Also read: குணசேகரனின் ஆட்டத்தை முறியடிக்கும் மருமகள்கள்.. ஜீவானந்தத்தால் மீண்டும் சூடு பிடிக்கும் எதிர்நீச்சல்

இதற்கு பின்னர் ஜனனி கொடுத்தார் பாரு முட்டாள் தனமான ஒரு பெர்பார்மன்ஸ். அதாவது நேர மாடிக்கு சென்று அப்பத்தாவை பார்த்து, அந்த ஜீவானந்தம் யாரு சொல்லுங்க அப்பத்தா என்று பாவம் அவரை உலுக்கி எடுத்து சொத்து விவகாரத்தை தெரிந்து கொள்வதற்காக படாத பாடு படுத்தி விட்டார். இதை பார்க்கும் பொழுது சொத்து கைவிட்டுப் போனதில் ஜனனிக்கு ரொம்ப ஏமாற்றம் போல. அந்த கோபத்தை மொத்தமாக கோமாவில் இருக்கும் அப்பத்தாவிடம் காட்டுகிறார்.

அடுத்ததாக ஈஸ்வரி, இந்த ஜீவானந்தம் குணசேகரனின் ஆளாகத்தான் இருப்பார். அவர் தான் ஏதோ கேம் விளையாடுகிறார். நாம் அனைவரும் இனி தான் உஷாராக இருக்க வேண்டும் என்று வாய்க்கு வந்தபடி பெனாத்திக் கொண்டிருக்கிறார். இப்படி முட்டாள்களாக மருமகளை காட்டிவிட்டு லாஜிக்கே இல்லாமல் சொதப்பலாக கதை நகர்கிறது. அடுத்தபடியாக இனி குணசேகரன் மற்றும் ஜீவானந்தம் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தருணம் நெருங்கி விட்டது.

Also read: எதிர்நீச்சல் கதாபாத்திரங்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. இதுல கூட குணசேகரனை நெருங்க முடியல!

Trending News