புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எதிர்நீச்சல் டோட்டல் டேமேஜ், விலக போகும் கேரக்டர்.. அடுத்த படத்தில் கமிட்டான குணசேகரன் மருமகள்

Ethirneechal character who is going to quit: ஆகோ ஓகோ என்று சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலை பாராட்டத்தவர்கள் யாரும் இல்லை. எந்த மூளை முடுக்கு திரும்பினாலும் குணசேகரனின் நடிப்பும், நாடகத்தின் வசனம் தான் தூக்கலாக அமைந்தது.

ஆனால் எப்பொழுது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இல்லாமல் போனாரோ, அப்பொழுது நாடகம் தடுமாறி விட்டது. சரி பெண்கள் முன்னேற்றத்தை போற்றும் விதமாக கதை நகர்ந்து வரும் என்று தொடர்ந்து சீரியலை பார்த்து வந்தால் தற்போது மொத்தமும் டேமேஜ் ஆகும் அளவிற்கு சொதப்பி கொண்டு வருகிறது.

இது என்னடா எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த சோதனை என்பதற்கு ஏற்ப கதை ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தி வருகிறது. இதற்கு பேசாமல் இந்த நாடகத்துக்கு ஒரு எண்டு கார்டு போட்டு விடுங்கள் என்று பலரும் கமெண்ட்ஸ்கள் மூலம் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து விட்டார்கள். அந்த வகையில் குணசேகரனின் தங்கையாக நடித்து வரும் ஆதிரையின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் நெகட்டிவ் ஆக இருந்தது.

ஆதிரை எடுத்த முடிவு

ஆனால் போகப்போக ஆதிரையின் நடிப்பும் கேரக்டரும் மாறியதால் அனைவருக்கும் பிடித்தமான ஒரு கதாபாத்திரமாக அமைந்துவிட்டது. அந்த வகையில் கரிகாலனை வேண்டாம் என்று அருணை தேடி கல்யாணம் பண்ணுவதற்காக சாருபாலா வீட்டிற்கு போய்விட்டார்.

இந்த சூழ்நிலையில் இவருடைய கதாபாத்திரம் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் வருமா என்பது தற்போது கேள்விக்குறியை எழுப்புகிறது. ஏனென்றால் ஆதிரை, அவருடைய சமூக வலைதளங்களில் போட்ட பதிவில் இப்ப வரை எதிர்நீச்சல் கதாபாத்திரத்தில் ஒரு கேரக்டராக நான் இருக்கிறேன்.

ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் இதிலிருந்து நான் போக தயாராக இருக்கிறேன் என்பது போல் பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் தொடர்ந்து புதுப்புது ப்ராஜெக்ட் வருவதால் அதிலும் என்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறேன். இதனால் தொடர்ந்து வெள்ளி திரையிலையும் இனி என்னை பார்க்கலாம் என்று போட்டிருக்கிறார்.

இன்னும் கூடிய விரைவில் ஆதிரை இந்த நாடகத்தை விட்டு விலகப் போகிறார். இவருடைய கேரக்டருக்கு புதிதாக யார் வருவார்கள் என்று இன்னும் எந்த தகவலும் வெளிவரவில்லை. ஆனால் தற்போது நாடகமே தலைகீழ மாறிவிட்ட நிலையில், ஆதிரையை தொடர்ந்து கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி சாப்டரும் க்ளோஸ் ஆகிவிட்டது.

ஏற்கனவே இந்த நாடகம் நல்லா இல்லை என்று சொல்லிய நிலையில் பேசாம இந்த நாடகத்திற்கு ஒரு எண்டு கார்டு போட்டு விடலாம்.

Trending News