புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

குணசேகரனை வாய் அடைக்க வைத்த அப்பத்தா.. பொறிவைத்து தூக்கப் போகும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் யார் கண்ணு பட்டுச்சோ மொத்தமும் சொதப்பிக்கொண்டே வருகிறது. அதிலும் கடந்த இரண்டு வருஷமாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த இந்த நாடகம் தற்போது ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டது. அத்துடன் கதையும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் வளவளன்னு ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே வராங்க.

அந்த வகையில் இந்த திருவிழா மற்றும் அப்பத்தா ஏற்பாடு பண்ணின நிகழ்ச்சியிலும் பல திருப்பங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதை தவிர மற்ற விஷயங்களை கடந்த இரண்டு வாரங்களாக கொண்டு வருகிறார்கள். இதில் யாருக்கு என்ன ஆகப்போகிறது, குணசேகரன் தோற்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற ஒரு விஷயம் தான் புரியாத புதிராக இருக்கிறது.

அத்துடன் ஜீவானந்தம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று அப்பத்தா நம்பிக்கை வைத்து அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. ஆனால் அவர் ஈஸ்வரிடம் சொன்னதை பார்க்கும் பொழுது இந்த திருவிழாவில் குணசேகரன் உயிருக்கு ஏதோ ஆபத்து இருப்பது போல் தெரிகிறது.

Also read: குணசேகரன் எடுத்த பேரும் புகழையும் ஊத்தி மூடப் போகும் ஜான்சி ராணி.. மொத்தமாக சொதப்பும் எதிர்நீச்சல் டீம்

அதே நேரத்தில் குணசேகரன், கதிர் மற்றும் வளவன் இந்த திருவிழாவில் அப்பத்தாவிற்கும் ஜீவானந்தத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என்று மாஸ்டர் பிளான் போட்டு வைத்தார்கள். ஆனால் தற்போது அப்பத்தாவின் அதிரடி பேச்சால் குணசேகரன் அரண்டு போய் அப்படியே வாயடைத்து போய் விட்டார். அதாவது கூடிய சீக்கிரமே இந்த வீட்டில் உள்ள பெண்கள் உன்னை எதிர்த்து நிற்பார்கள். இனி அவர்கள் அடங்கிப் போவார்கள் என்று நினைக்காதே என்று சொன்னார்.

இதனால் குணசேகரன், இனியும் அப்பத்தாவை விட்டு வைத்தால் இவர் பேச்சைக் கேட்டு மற்ற பெண்களும் எதிர்த்து பேச ஆரம்பித்து விடுவார்கள். அதனால் கச்சிதமாக அப்பத்தாவின் கதையை முடித்து விட வேண்டும் என்று தீர்மானமாக முடிவு பண்ணி விட்டார். அத்துடன் கதிரை கூப்பிட்டு இனி அப்பத்தா ஜீவானந்தம் விஷயத்தில் தலையிட வேண்டாம் வளவனிடமும் சொல்லிவிடு என்று கூறுகிறார்.

இதன் பிறகு குணசேகரன் யாருக்கும் தெரியாமல் மற்றொரு நபரை வைத்து அப்பத்தா மற்றும் ஜீவானந்தத்திற்கு ஸ்கெட்ச் போடுகிறார். இந்த ஒரு விஷயம் யாருக்குமே தெரியாத படி குணசேகரன் காய் நகர்த்துகிறார். ஆனால் இவர்களுக்கு இடையில் ஒருவர் மட்டுமே பலிகாடாக சிக்கப் போகிறார். அது குணசேகரின் அம்மா விசாலாட்சியாக கூட இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆக மொத்தத்தில் இந்த திருவிழாவில் ஒரு சம்பவம் நடக்கப் போகிறது.

Also read: பிள்ளை இல்லாத வீட்டில் துள்ளி விளையாடும் கோபி.. சைடு கேப்பில் பாக்கியாவின் மகளுக்கு பாயாசத்தை போடும் சக்களத்தி

Trending News