ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

13 வருடங்கள் ஆகியும் மறக்க முடியாத சம்பவம்.. அஜித்தின் கெத்தும் ரஜினியின் தில்லும்

Rajini – Ajith : அஜித் இப்போது எல்லாம் எந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் படங்களின் ப்ரோமோஷன் ஆகியவற்றிற்கு கூட கலந்து கொள்வதில்லை. ஏனென்றால் ஆரம்பத்தில் செய்தியாளர் சந்திப்பில் ஏதாவது அஜித் பேசுவது தொடர்ந்து சர்ச்சையாகி கொண்டு இருந்தது.

அதன்பிறகு ரஜினி தான் அஜித்திடம் இனி செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துக் கொள்ளும்படி சொன்னதாக ஒரு செய்தியும் வெளியானது. அதிலிருந்து அஜித் இதுபோன்ற விஷயங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில் அஜித் பேசிய சம்பவம் 13 வருடங்கள் ஆகியும் தற்போது வரை ஒரு மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது 2010 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி சினிமாவில் உள்ள முக்கிய நட்சத்திரங்களும் பங்கு பெற்றிருந்தனர். அப்போது அஜித் எந்த பயமும் இன்றி பேசிய பேச்சு தான் இன்றும் ஒரு மறக்கமுடியாத சம்பவமாக இருக்கிறது.

Also Read : இந்த அஞ்சு டைரக்டர்ல அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை லாக் செய்த சூர்யா.. எனக்கு ஏத்த மூளைக்காரன் நீதான்

அதாவது சினிமா பிரபலங்களை கட்டாயப்படுத்தி இதுபோன்ற நிகழ்வுக்கு அழைக்கக்கூடாது என அஜித் வெளிப்படையாகவே பேசி இருந்தார். இவ்வாறு அஜித் அந்த விழாவில் கெத்து காட்டினாலும், ரஜினியும் தன்னுடைய தில்லை காட்ட வேண்டும் என்பதற்காக அஜித் பேசியதற்கு எழுந்து நின்று கைதட்டி இருந்தார்.

இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. இதில் யாரையும் கட்டாயப்படுத்தாமல் விருப்பமுள்ள நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர். ஆகையால் தான் 13 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு இந்த விழாவால் இப்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

Also Read : புது ட்ரெண்ட் செட்டை உருவாக்க துடிக்கும் அஜித்.. மூளைகாரனிடம் சரணடைந்த ஏகே

Trending News