வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

23 வருடங்கள் ஆகியும் விஜய் பக்கத்தில் நெருங்க முடியாமல் தவிக்கும் அஜித்.. கேரளாவின் வசூல் மன்னனாக வரும் தளபதி

Actor Vijay and Ajith: விஜய் மற்றும் அஜித் சினிமாவில் இரு துருவங்களாக போட்டி போட்டுக் கொண்டு வலம் வருகிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய எண்ணம் அப்படி இல்லை என்றாலும் கூட போகப் போக இவர்களுக்குள் போட்டி நிலவியதால் தற்போது பொறாமையில் வந்து நிற்கிறது.

ஆனாலும் என்னதான் இவர்கள் போட்டி போட்டுக் கொண்டாலும் அஜித்தை விட ஒரு படி மேலே தான் விஜய் இருக்கிறார். அது எந்த மாதிரி என்றால் ரசிகர்களை அதிகம் கவரக்கூடியவராகவும், வசூலில் மன்னனாகவும் விஜய் முந்திவிட்டார்.

Also read: விஜய் போட்ட கண்டிஷனால் விழி பிதுங்கி நிற்கும் வெங்கட் பிரபு.. தளபதி 68 முடிவதற்குள் ஒரு வழி ஆயிடுவாரு போல

ஒரு கட்டத்தில் விஜய்யை முந்தமுடியாது என்று நினைத்து அஜித் துவண்டு போய்விட்டார். அத்துடன் விஜய்க்கு எல்லா இடத்திலும் ரசிகர்கள் இவரைத் தூக்கிக் கொண்டாடும் விதமாக உள்ளனர். இவர் நடித்த படத்திற்கு தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் வரவேற்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. அதிலும் கேரளா மக்களுக்கு விஜய் என்றால் கொள்ள பிரியம்.

இவருடைய படத்தை தவறாமல் பார்த்து திரையரங்குகளில் விஜய்யின் பேனர் மற்றும் கட்டவுட் வைத்து ஆரவாரப்படுத்தி வருவார்கள். அப்படி 23 வருடங்களுக்கு முன் வெளிவந்த குஷி திரைப்படத்தை கேரளாவில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். அப்பொழுது இப்படம் 3.45 கோடி வசூலில் சாதனை புரிந்தது.

Also read: மாஸ்டர் படத்திலிருந்து விஜய்க்கு வந்த புதுப்பழக்கம் .. மன்சூர் அலிகான் கூட இருந்தால் கேட்கவா வேணும்

இதைத் தொடர்ந்து விஜய்க்கும் கேரள ரசிகர்கள் என்றால் ஒரு தனி பாசம் உண்டு. தற்போது வரை இது நீடித்துக் கொண்டே வருகிறது. அதனால் கண்டிப்பாக விஜய்யின் எல்லா படங்களும் அங்கே வெளியிடப்பட்டு வரும். அந்த வகையில் அஜித் மிகவும் பின்தங்கி தான் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

இவர் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று லாபத்தை கொடுத்தாலும். கேரளாவில் 2.65 கோடி வசூலை மட்டும் பெற்றுள்ளது. ஆனால் இதை அசால்ட்டாக 23 வருடங்களுக்கு முன் விஜய் தட்டி தூக்கி விட்டார். இதை பார்க்கும் பொழுது அஜித் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் விஜய் பக்கத்தில் நெருங்க முடியாது.

Also read: 14 வருடங்கள் ஆகியும் தீராத பகை.. அவமானப்படுத்தியரிடமே அடைக்கலமா என வெளுத்து வாங்கிய அஜித்

Trending News