Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் முத்து மீனாவின் எதார்த்தமான நடிப்பும், நடுத்தர குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை காட்டுவதால் தான். ஆனால் இதில் பொய் பித்தலாட்டம் பண்ணி ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வரும் ரோகிணியின் உண்மையான முகம் மறைக்கப்பட்டு வருவதை பார்ப்பதற்கு கடுப்பாக இருக்கிறது.
அதுவும் செய்த தில்லாலங்கடி வேலையை மறந்து முத்து மீனாவையும் அசிங்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு செயல்களையும் செய்து வருகிறார். முக்கியமாக மீனா வீட்டு வேலைக்காரியாகவும் நாம் தான் எஜமானி என்கிற மாதிரி அதிகாரம் பண்ணி வருகிறார். அந்த வகையில் சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட 500 எபிசோடுக்கு மேல் தாண்டி விட்டது.
ஓவராக ஆட்டம் போடும் ரோகிணி
ஆனால் இன்னும் வரை ரோகிணி பற்றிய விஷயங்கள் ஒன்று கூட வெளியே வராமல் கதை நகர்ந்து வருவது பார்ப்பதற்கு சுவாரஸ்யம் இல்லாமல் ஆகிவிட்டது. அதனால் தான் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்திற்கு போய்விட்டது. இப்படியே போனால் கூடிய சீக்கிரம் மொத்தமாக அடி வாங்கி விடும்.
அதனால் மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரோகிணி பற்றிய விஷயங்கள் முத்து கண்டுபிடித்ததாகவும் விஜயாவிடம் கையும் களவுமாக சிக்கி மாட்டிக் கொள்வதை காட்டும் விதமாக அமைந்தால் இன்னும் இந்த நாடகம் அதிகளவில் சூடு பிடித்து விடும். போதாதருக்கு மனோஜ் பிசினஸ் பண்ணுவதற்கு தான் அப்பா பணம் கொடுத்ததாக ஏமாற்றிய விஷயம் தெரிய வர வேண்டும்.
அதாவது ரோகிணி அப்பா பணம் கொடுக்கவில்லை, மனோஜை ஏமாற்றி போன ஜீவாவிடம் இருந்து திரும்பப் பெற்ற பணம்தான் அந்த 30 லட்சம் ரூபாய். அதுவும் அண்ணாமலை கொடுத்த காசு தான் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தால் ரோகிணியின் ஆட்டம் சுக்குநூறாக உடைந்து விடும். அட்லீஸ்ட் இப்பொழுது இந்த ஒரு விஷயமாவது வெளி வரும்படி இருக்க வேண்டும்.
இதை தான் மக்கள் பார்ப்பதற்கு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தொடர்ந்து சொதப்பாமல் ரோகிணி பற்றிய உண்மையை கண்டுபிடிக்கும் விதமாக முத்துவுக்கு கொஞ்சம் ஒர்த்தான கேரக்டரை கொடுக்க வேண்டும். அத்துடன் ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை என்கிற உண்மையும் வெட்ட வெளிச்சமாக வரவேண்டும். இதெல்லாம் நடந்தால் சிறகடிக்கும் ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிகரித்து விடும்.
சிறகடிக்கும் ஆசை சீரியலின் முந்தைய சம்பவங்கள்
- விஜயாவை தூண்டிவிட்டு அவமானப்படுத்திய ரோகினி
- ரோகிணியை பிளாக்மெயில் பண்ணிய தினேஷை துரத்தும் முத்து
- முத்து பேச்சை கேட்டு குதூகலமான விஜயா ரோகினி