வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக் பாஸ் ஷோ முடிந்த பிறகும் அருணை வச்சு செய்த விஜய் சேதுபதி.. அரண்டு போன போட்டியாளர்கள், சமரசம் செய்த விஷால்

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களை தாண்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் மீதமுள்ள நாட்கள் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் 15 போட்டியாளர்கள் இருப்பதால் கடந்த வாரம் முதல், டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி போன வாரம் வெளியேறியது போல் இந்த வாரம் முதல் போட்டியாளராக சத்தியா சனிக்கிழமை எபிசோடில் வெளியேறி விட்டார்.

இவரை தொடர்ந்து இன்று தர்ஷிகாவும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு விட்டது. ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி பேர் வாங்கியது தர்ஷிகா தான். ஆனால் போகப் போக கிரிஞ்சு காதலை விஷாலுடன் செய்து வந்ததால் தர்ஷிகாவின் விளையாட்டு பிடிக்காமல் அவரை வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள்.

அந்த வகையில் தர்ஷிகாவின் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தாச்சு. இதற்கிடையில் கடந்த இரண்டு வாரமாக விஜய் சேதுபதி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை வெளுத்து வாங்கும் விதமாக நேருக்கு நேர் தப்புகளை தட்டிக் கேட்டு ஒவ்வொரு போட்டியாளர்களையும் வச்சு செய்து விட்டார். இதனால் அரண்டு போன போட்டியாளர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பயப்படும் அளவிற்கு விஜய் சேதுபதி தரமான சம்பவத்தை செய்து வருகிறார்.

அதிலும் நேற்று பலியாடாக விஜய் சேதுபதி இடம் சிக்கியது அருண் தான். அதாவது கடந்த வாரம் பணியாளர் மற்றும் மேனேஜர் டாஸ்க்கில் அருணை லேபர் என்று கூப்பிட்டதற்காக பிரச்சனை பண்ணினார். அந்த வகையில் விஜய் சேதுபதி வந்த பொழுது லேபர் ஒன்னும் தவறான வார்த்தை கிடையாது. அதை மட்டமாக நினைக்க வேண்டாம் என்று சொல்லிய நிலையில் அருண் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று வாதாடும் அளவிற்கு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதற்கு ஏற்ப தொடர்ந்து அவருடைய வாக்குவாதத்தை வைத்து வந்தார்.

கடைசியில் இந்த பஞ்சாயத்து முடிந்த பிறகு பிக் பாஸ் முடிந்த நிலையில் அருண் மற்றும் விஷால் இந்த விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட விஷால் என்ன சொல்ல வருகிறார் என்பதை அருண் புரிந்து கொள்ளாமல் நான் தப்பான அர்த்தத்தில் சொல்லவே இல்லை. அதை தப்பாக விஜய் சேதுபதி மக்களிடம் காட்டியது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று விஜய் சேதுபதி பிக் பாஸ் போல் குரலை கொடுத்து அரை மணி நேரம் அருண் இடம் பேசி புரிய வைக்க முயற்சி எடுத்தார்.

திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விஜய் சேதுபதி பேசியதால் மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி அரண்டு போய் நின்று விட்டார்கள். பிறகு அருணை சமரசம் செய்யும் விதமாக விஷால் பிரச்சனை என்ன என்று சொல்லி புரிய வைக்க முயற்சி எடுத்தார். அந்த வகையில் கடந்த 70 நாட்களில் விஜய் சேதுபதி புரிந்து கொண்டது என்னவென்றால் எங்கே தட்டிக் கேட்கணும், யாரிடம் அன்பாக சொல்லணும் என்ற தந்திரத்தை புரிந்து கொண்டு அதன்படி செயல்பட்டு வருகிறார்.

Trending News