வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

புதிய கட்சி ஆரம்பிச்சாலும் ஒன்னும் முடியாது.. விஜய்யை சீண்டிய திருமாவளவன், கொந்தளித்த தவெகவினர்

தமிழகம் வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த விஜயின் அரசியல் வருகை என்பது எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் வரும் 2026 ஆம் ஆண்டில் முதல்வர் ஆக வேண்டும் என்ற கனவோடு, லட்சியத்தோடு முயற்சித்து வருகிறார். இதற்காகவே சமீபத்தில் தன் வெற்றி கொள்கை மாநாட்டை நடத்தி, தன் கொள்கைகளை வெளியிட்டார்.

இக்கொள்கைகளை பலரும் கிண்டல் செய்தனர். நாம் தமிழர் கட்சியினர் கடுமையான விமர்சித்தனர். இதனால் முதல் மாநாட்டிலேயே திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளையும், பல கட்சித் தலைவர்களையும் விஜய் தாக்கிப் பேசியது அவருக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்துமா என கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகையையும் அவரது ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு என்ற கொள்கை முழக்கத்தை விடுதலை சிறுத்தைககள் கட்சியும் அக்கட்சி தலைவர் திருமாவளனும் ஆதரித்தனர். இதையடுத்து, திமுகவுடனான கூட்டணியில் இருந்து விசிக விலகி, அடுத்த தேர்தலில், தவெகவுடன் விசிக கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இதைத்தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளனுடன் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஏறக்குறைய திமுக – விசிக கூட்டணி உறுதியானதாக பலரும் கூறினர். இதற்கிடையே விசிக, தவெகவுக்கு ஆதரவளிக்குமானால், விசிகவை உடைக்க திமுக திட்டமிட்டிருப்பதாகவும், அக்கட்சிக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் அழுத்தம் கொடுப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யை சீண்டிய திருமாவளவன்

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விசிக மைய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திலிபன் தாய் ராணியம்மாள் படத் திறப்பு விழாவில் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். அப்போது அவர், ”எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி துவங்கினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குப் போட்டியாளராக ஆக முடியாது ”என்று தெரிவித்துள்ளார். இவர் விஜய்யைத்தான் தாக்கி பேசியதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

விசிக விழாவில் பங்கேற்பாரா விஜய்?

எனவே, தவெகவுடன் விசிக கூட்டணி அமைப்பதாக கூறப்பட்ட நிலையில், திருமாவளவன் விஜய்யையே சீண்டியுள்ளது தவெகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தன் முதல் மாநாட்டில் திராவிட கட்சிகளுக்கு கிலி ஏற்படுத்திய விஜய்யின் செல்வாக்கை, திருமா குறைத்து மதிப்பிடுகிறாரே என டென்சனான தவெகவினர் விசிகவோடு கூட்டணியும் வேண்டாம், விசிகவின் நிகழ்ச்சிகளின் பங்கேற்க கூடாது. குறிப்பாக வரும் டிசம்பரில் நடக்கும் விசிக நிர்வாகியின் புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர் விஜய் பங்கேற்க கூடாது என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Trending News