செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அசீம் 50 லட்சம் ஜெயிச்சாலும் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. கைக்கு எட்டனது வாய்க்கு எட்டாம போச்சே

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற அசீமுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இணையத்தில் கிளம்பி உள்ளது. சின்னத்திரை தொடர்களில் கதாநாயகனாக நடித்த அசீமுக்கு ஆரம்பத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அவருடைய சட்டென்று கோபத்தினால் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார்.

இந்நிலையில் இறுதியில் பிக் பாஸ் டைட்டில் பட்டம் அசீமுக்கு தான் கிடைத்துள்ளது. எல்லா சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் அசீம் வாங்கிய தொகை மிகக் குறைவு தான். அதாவது டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் என்பது அசீமுக்கு மட்டும் சொந்தமானதல்ல.

Also Read : விக்ரமன் தோல்விக்கு இவர் தான் காரணம்.. உச்சகட்ட அதிர்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்

இதுக்கு முன்னதாக பணமூட்டையை எடுத்த கதிரவன், பணப்பெட்டியை எடுத்த அமுதவாணன் ஆகியோரின் தொகையும் அதில் அடங்கும். அப்படிப் பார்த்தால் கதிரவனுக்கு 3 லட்சம் மற்றும் அமுதவாணனுக்கு 11 லட்சத்து 70 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இவர்கள் இருவரது பணத்தையும் சேர்த்தால் 14 லட்சத்து 70 ஆயிரம் வருகிறது. 50 லட்சத்தில் இந்த தொகையை கழித்தால் மீதம் 35 லட்சத்தி 30 ஆயிரம் மட்டும்தான் இருக்கும். மேலும் இந்த தொகைக்கு ஜிஎஸ்டி போக மீதம் 24 லட்சம் மட்டுமே அசீமுக்கு கிடைத்துள்ளது.

Also Read : ஜெயிக்க ஆசைப்பட்டா மட்டும் போதாது.. பிக் பாஸில் சிவின் வெளியேறியதற்கு கமல் கூறிய காரணம்

அசீம் டைட்டில் வின்னர் மேடையில் 25 லட்சத்தை தானமாக கொடுப்பதாக கூறியிருந்தார். அவருடைய பரிசுத்தொகை 24 லட்சம்மாக இருக்கும் போது 25 லட்சத்தை எப்படி தானமாக கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் அடித்தாலும் ஒரு ரூபாய் கூட அவருக்கு கிடைக்கவில்லை.

மற்ற போட்டியாளர்களுக்கு டைட்டில் வின்னர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை என்றாலும் ஓரளவு சொற்ப தொகையாவது எடுத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் அசீமின் நிலை பரிதாபத்திற்குரியது. பிக் பாஸில் அசீம் வாங்கிய சம்பளத் தொகை மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளது.

Also Read : அசீம், விக்ரமன், ஷிவின் என பைனல் லிஸ்ட் வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

Trending News