புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

100 கோடி கொடுத்தாலும் அது மாதிரி நடிக்க மாட்டேன்.. கொள்கையை விட்டுக் கொடுக்காத சில்வர் ஜூப்ளி நடிகர்

ரஜினி, கமலுக்கு இணையான நடிகராக வரவேண்டியவர் ராமராஜன். கிராம சாயலும், கள்ளம் கபடமற்ற பேச்சும் இவருக்கான ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது. அந்த காலகட்டத்தில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக ராமராஜன் வலம் வந்து கொண்டிருந்தார். அதிலும் இவருடைய கரகாட்டக்காரன் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஆனால் குடும்பப் பிரச்சனை மற்றும் அரசியல் ஆகியவற்றால் சினிமாவில் இருந்த ராமராஜன் ஒதுங்கி இருந்தார். அதுமட்டுமின்றி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று காத்திருந்தார். இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

Also Read : ராமராஜன் ரீ என்ட்ரி படத்திற்கு வந்த ஆபத்து.. சாமானியன் என்ற டைட்டிலில் நடந்த துரோகம்!

இந்நிலையில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ராமராஜன் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ராமராஜன் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு சாமானியன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இது குறித்து ராமராஜன் ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

அதாவது சாமானியன் படத்தில் திரைக்கதையும், டைட்டிலும் தான் கதாநாயகன். நான் துப்பாக்கியை தூக்கி நடித்தால் ரசிகர்கள் கதாநாயகன் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இவர் வயல்காட்டில் வேலை செய்பவர் ஆச்சே. அவர் கையில் ஏன் துப்பாக்கி என்று கேட்பார்கள்.

Also Read : ஜோசியம் பார்த்து கணித்த ராமராஜன்.. அன்றே தெரிந்து கொண்ட நளினி

இதனால் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத மாதிரி தாறுமாறான படங்களில் 100 கோடி கொடுத்தாலும் நான் நடிக்க மாட்டேன் என்று ராமராஜன் கூறியுள்ளார். இப்போது மட்டுமல்ல எப்போதுமே பணத்துக்காக எனது கொள்கையை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

அதனால் தான் தொடர்ந்து 45 படங்களில் கதாநாயகனாக நடித்தேன். அதுமட்டுமின்றி இப்போது நான் நடிக்கும் சாமானியன் படத்திலும் எனக்கு ஜோடி கிடையாது. மேலும் இந்த கதையில் நடிப்பதை நான் பெருமையாக கருதுவதாக ராமராஜன் கூறியுள்ளார்.

Also Read : ராமராஜன் விவாகரத்துக்கு இந்த நடிகைதான் காரணமா.? பல வருடம் கழித்து வெளியான உண்மை

Trending News