வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

100 கோடி கொடுத்தாலும் சிம்புன்னா பண்ண மாட்டேன்.. தலையை பிச்சுக்கும் கமல், கை கொடுக்கும் கேஜிஎஃப்

Actor Simbu: சிம்புவை தன் தயாரிப்பில் நடிக்க கமிட் செய்தது தப்போ என்று கமல் நினைக்கும் அளவுக்கு அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இவர்களின் கூட்டணியில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் STR48( எஸ் டி ஆர் – 48 ) படத்தின் அறிவிப்பு வெளிவந்து மாத கணக்காகிவிட்டது.

ஆனால் படம் ஆரம்பிப்பதற்கான அறிகுறி தான் தென்படவே இல்லை. இதற்கிடையில் ஐசரி கணேஷ் உடன் இருந்த கருத்து வேறுபாடு, ரெட் கார்டு, கோர்ட், கேஸ் என்று சிம்புவின் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனது. இருந்தாலும் பிரச்சனை எல்லாம் முடியட்டும் என்று கமல் காத்திருந்தார்.

Also Read: தனுஷ் முதல் ரஜினி வரை மரண ஹிட் கொடுக்கும் அனிருத்.. ஒட்டவே முடியாத அளவிற்கு சர்ச்சையை கூட்டிய சிம்பு

தற்போது அனைத்தும் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்று அணுகி இருக்கின்றனர். ஆனால் அவரோ நீங்கள் 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட சிம்பு இருக்கும் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன் என்று மறுத்து விட்டாராம்.

இது என்ன புது குழப்பம் என்று பார்த்தால் எல்லாம் பழைய விவகாரம் தானாம். பல வருடங்களுக்கு முன்பு பீப் சாங் பிரச்சனையில் சிம்புவுடன் சேர்ந்து அனிருத்தின் பெயரும் சின்னாபின்னமானது. அதிலிருந்தே இவர்களுடைய நட்பும் உடைந்து போனது.

Also Read: பட்ஜெட்டை முடிவு செய்த கமல்.. முழுசா முடி வளர்த்த சிம்புவுக்கு காட்டிய க்ரீன் சிக்னல்

இந்த காரணத்தினால் தான் அனிருத் இப்போது கமல் படம் என்று தெரிந்தும் கூட இசையமைக்க மறுத்துவிட்டாராம். இப்படி நாலா பக்கமும் சிம்புவால் வரும் குடைச்சலால் ஆண்டவர் தான் பாவம் தலையை பிச்சுக்காத குறையாக இருக்கிறாராம். இருப்பினும் தற்போது அவர் கேஜிஎஃப் பிரபலத்தையே வளைத்து போட்டு விட்டார்.

அந்த வகையில் அப்படத்திற்கு இசையமைத்த ரவி பாசூரை தான் கமல் பல கோடி சம்பளம் கொடுத்து கமிட் செய்திருக்கிறார். இதுதான் இப்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் அனிருத் மறுத்தாலும் கேஜிஎஃப் இசையமைப்பாளர் கை கொடுத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது.

Also Read: 1000 கோடி பட்ஜெட்டில் கமல் கைவசம் இருக்கும் 4 படங்கள்.. உலகநாயகனுக்கே ட்ரெய்னிங் கொடுக்கும் ஹெச்.வினோத்

Trending News