வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Varalakshmi: வருங்கால புருஷன் ஹல்க் மாதிரி இருந்தாலும் பொண்டாட்டிய தாங்குறாரு.! வைரலாகும் கோமளவல்லியின் புகைப்படங்கள்

Varalakshmi: கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பேரும் புகழும் தானாக கிடைத்துவிடும் என்பதற்கு உதாரணம் வரலட்சுமி சரத்குமார். ஹீரோயினாக நடித்த படங்கள் கம்மியாக இருந்தாலும் நெகடிவ் ரோல், துணிச்சலான கதாபாத்திரம், பிரமிக்க வைக்கும் எதார்த்தமான நடிப்பு இவைகளை வைத்து சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

அதனால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து பேரும் புகழையும் வாங்கி விட்டார். அதுவும் சமீபத்தில் தெலுங்கு படங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அப்படிப்பட்டவர் 39 வயது ஆகிய நிலையில் இப்பொழுது தான் திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார்.

வருங்கால கணவருடன் ஊர் சுற்றும் வரலட்சுமி

varalakshmi (4)
varalakshmi (4)

அந்த வகையில் 16 ஆண்டுகளுக்கு முன் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இந்நிலையில் அவர் காதலிக்கும் நபர் யார் என்றால் ஏற்கனவே கல்யாணம் ஆகி 15 வயதில் குழந்தை இருக்கும் தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ்.

பொண்டாட்டியை தாங்கும் நிக்கோலய்

varalakshmi (3)
varalakshmi (3)

இவருக்கு முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டார். அதனால் இப்பொழுது இவருடன் சேர்ந்து வரலட்சுமிக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கப்போகிறது. ஆனால் அதற்குள் நாடு நாடாக சென்று இந்த கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார்கள்.

varalakshmi (1)
varalakshmi (1)

இப்பல்லாம் இது பெரிய விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப தான் காலம் மாறிக்கொண்டே வருகிறது. ஆனால் இவர்களைப் பொறுத்தவரை வரலட்சுமி விட தொழில் அதிபராக இருக்கும் நிக்கோலய் பாசத்தை கொட்டி வருகிறார். கல்யாணத்திற்கு முன்னே தனக்கு மனைவியாக வரப்போகும் வரலட்சுமி பெயரில் மும்பையில் வீடு வாங்கி பரிசளித்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து மனைவியை பொக்கிஷமாக பாதுகாக்கும் விதமாக இப்பவே பொண்டாட்டியை தாங்கு தாங்கு என்று தாங்குகிறார். பார்க்க ஆளு ஹல்க் மாதிரி பல்க்கா இருந்தாலும் பொண்டாட்டின்னு வந்து விட்டால் நாலாம் ஒண்ணுமே இல்லை என்பதற்கு ஏற்ப தான் தாங்குகிறார். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

Trending News