திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மார்க்கெட் குறைந்தாலும் அநியாயம் பண்ணும் விஷால்.. மாட்டிக்கொண்டு புலம்பும் இயக்குனர்கள்

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லத்தி திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே பல தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷால் இனிமேல் ஹீரோவாக தொடர்ந்து நடிக்க முடியுமா என்று ரீதியில் விமர்சனங்கள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் மீது சில குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது.

அதாவது விஷாலுக்கு தெலுங்கு இயக்குனர் ஒருவர் கதை சொல்லி சம்மதமும் வாங்கி இருக்கிறார். ஆனால் விஷால் அவருடைய படத்திற்கு கால்ஷூட் கொடுக்காமல் ஏழு வருடம் வரை அப்படத்தை இழுத்தடித்து வந்திருக்கிறார். இதனால் வெறுத்துப்போன அந்த இயக்குனர் திரும்பவும் ஆந்திராவுக்கே சென்றிருக்கிறார்.

Also read: கமல், மணிரத்தினத்தை காப்பி அடித்த விஷால்.. கடைசியில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்

அது மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் திரைப்படங்களில் கூட விஷால் சரியான நேரத்திற்கு சூட்டிங் வருவது கிடையாது. அந்த வகையில் எப்பவோ முடிந்திருக்க வேண்டிய லத்தி திரைப்படம் இவருடைய பொறுப்பின்மையால் தான் இவ்வளவு தாமதமாக ரிலீஸ் ஆனது. மேலும் தயாரிப்பாளர்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இதனாலேயே இவர் மீது பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை ஆனாலும் இவருடைய அட்டூழியங்கள் ஒவ்வொரு நாளும் அதிகமாகி கொண்டே செல்வதாக பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.

Also read: சுழட்டி அடிக்கப்பட்ட லத்தி.. முதல் நாள் வசூலில் மண்ணை கவ்விய விஷால்

இதேபோன்றுதான் மலையாள நடிகர் திலீப் கூட இயக்குனர்களை காக்க வைத்து ரொம்பவும் வெறுப்பேற்றி இருக்கிறார். அதனாலேயே அவரால் ரொம்பவும் பாதிக்கப்பட்ட இயக்குனர் ஒருவர் ஒரு முக்கிய வழக்கில் அவருக்கு எதிரான சாட்சியங்களை சேகரித்து கொடுத்து அவரை போலீசிடம் சிக்க வைத்து கைது செய்ய வைத்தார். அந்த அளவுக்கு திலீப் அந்த இயக்குனரை படாத பாடு படுத்தி இருக்கிறார்.

தற்போது கோலிவுட்டில் விஷாலும் அப்படிப்பட்ட வேலையை தான் செய்து வருகிறாராம். அதனால் அவர் மீது தீராத கடுப்பில் இருக்கும் பலர் அவரை வசமாக எதிலாவது சிக்க வைக்க காத்துக் கொண்டிருக்கிறார்களாம். அப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் தான் விஷால் மற்றவர்களை மதித்து நடப்பார் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read: கான்ஸ்டபிள் முருகானந்தமாக வாழ்ந்திருக்கும் விஷால்.. லத்தி பட முழு விமர்சனம்

Trending News