நீங்க ஜேம்ஸ் பாண்டாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது.. விஜய்க்கு அட்வைஸ் செய்த பிரபலம்..

இந்திய சினி  மாவில் உள்ள பல நடிகர்களுக்கும் சூப்பர்ஸ்டார் என்றால் போட்டிப் போட்டு ரசித்தும், அவரை கிடைக்கும் மேடைகளிலெல்லாம் அவரது நடிப்பு ஸ்டைல் உள்ளிட்டவை புகழ்ந்தும் வருவார். பல நடிகர்களுக்கும் அவருடனான ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்றும் ,சில நடிகர்கள் அவரை தூரத்திலிருந்தோ, அருகிலோ பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டாலே போதும் என சொல்லும் அளவிற்கு அவரது வளர்ச்சி விண்ணைத் தாண்டியுள்ளது.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்தவரை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ரஜினிகாந்திற்கு சூப்பர்ஸ்டார் பட்டத்தை வழங்கினார். இப்பட்டம் இவருக்கு வழங்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் நிலையில், இன்று வரை பல நடிகர்கள் இந்த பட்டத்திற்காக ஆசைப்பட்டு வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். அதில் அண்மைக்காலமாக, நடிகர் விஜயை அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பலரும் அவரை உசுப்பேத்தி வருகின்றனர்.

Also Read: நின்றுபோன படத்தை தூசி தட்டும் ரஜினி.. தலைவர் முடிவால் உச்சகட்ட சந்தோஷத்தில் லைக்கா

இளைய தளபதியாக வலம் வந்த விஜய், அட்லீ இயக்கிய மெர்சல் படத்திற்கு பின் தளபதி என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். தற்போது அவரது நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தில் அவரது பெயரை தீ தளபதியாக மாற்றி ரசிகர்களை மேலும் குதூகலம்படுத்தியுள்ளனர். இருந்தாலும் விஜயை அடுத்த சூப்பர்ஸ்டாராக பார்க்க பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த அளவிற்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் உயர்ந்ததாக விஜய்க்கு உள்ளது. இதனிடையே அண்மையில் இயக்குனர் வி.அழகப்பன் பேசிய பேட்டியில் ,சூப்பர்ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ள ரஜினிகாந்த் 169 படங்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய் தற்போது தான் 70 படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்னும் அவர் குடும்ப பாங்கான படங்களில் அதிகம் நடிக்க வேண்டும். மேலும் ஆக்ஷன் படங்களில் விஜய் நடிப்பது மட்டுமே அவரை சூப்பர்ஸ்டாராக நிப்பாட்டாது .

Also Read: வாரிசு விழாவை புறக்கணித்த சங்கீதா, கிளம்பிய விவாகரத்து சர்ச்சை.. வெளிவந்த உண்மை காரணம்

ஏன் ஜேம்ஸ் பாண்டாக இருந்தால் கூட சூப்பர்ஸ்டார் பட்டத்தை ரஜினியிடம் இருந்து பறிக்க முடியாது. மேலும், ரஜினிகாந்தே விஜயின் வீடு படி ஏறி நீங்கள் தான் அடுத்த சூப்பர்ஸ்டார், எனது சூப்பர்ஸ்டார் பட்டத்தை உங்களுக்காக விட்டுக்கொடுக்கிறேன் என்று விஜயிடம் அவரே சொன்னாலும் மக்கள் குறைந்தது அடுத்த 30 ஆண்டுகள் வரை விஜயை சூப்பர்ஸ்டாராக ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.

சூப்பர்ஸ்டார் பட்டம் என்பது மக்கள் ரஜினிகாந்திற்கு கொடுத்த மதிப்பீடு, அதில் விஜய் பங்கெடுத்துக்க கூடாது, அவருக்கு கிடைத்த மதிப்பீடு தளபதி தான் அதை வைத்து அவர் திருப்திப்படுத்தி கொள்ள வேண்டும் என இயக்குனர் அழகப்பன் தெரிவித்துள்ளார். வாரிசு பட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியின் போது நடிகர் சரத்குமார் மேடையில் விஜயை அடுத்த சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து பேசியதையடுத்து கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சைக்குரிய பேச்சாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அஜித்தின் சென்டிமென்ட்டுக்கு ஆப்பு வைத்த வாரிசு.. துணிவுக்கு ஷாக் கொடுத்த விஜய்