வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினிக்கே இப்படி செஞ்சா புடிக்காது.. கோவத்தில் கிழித்தெறிந்து சீமான் வெளியிட்ட அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்திய விஷயம் சினிமா விமர்சகர் பிஸ்மியை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டது தான். அதாவது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என பிஸ்மி கூறியிருந்தார்.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ரஜினி ரசிகர்கள் அவர் வீட்டுக்கே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையாக வெடித்தது. இது குறித்து நடிகர் மற்றும் அரசியல்வாதியான சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் என்ற இடம் யாருக்குமே நிரந்தரம் கிடையாது.

Also Read : சக்கையாக பிழிந்து எடுக்கும் ரஜினி பட இயக்குனர்.. தெறித்து ஓடும் லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா

ஒரு காலகட்டத்தில் தியாகராஜ பாகவதர் உச்ச நட்சத்திரமாக இருந்தார். இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் அந்த இடத்தை பிடித்தார். அதன் பிறகு எம்ஜிஆர் அரசியலுக்கு சென்ற பிறகு ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. தற்போதைய காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருப்பது விஜய் தான்.

இதைக் குறிப்பிடும் நோக்கில் தான் சகோதரர் பிஸ்மி தனது ஊடகத்தில் கருத்துக்களை தெரிவித்தார். இதற்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் அவர் அலுவலகத்திற்கு சென்று ஒருமையில் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம். ரஜினியின் ரசிகர்கள் என்றால் எப்போதுமே அனுபவமும், முதிர்ச்சியையும் உடையவர்கள்.

Also Read : நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் தளபதி தான்.. சினிமா பிரபலத்தை ரவுண்டு கட்டிய ரஜினி ரசிகர்கள்

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பக்குவமாக செயல்படக்கூடியவர்கள். இப்படி இருக்கையில் அநாகரிகமாக நடந்து கொண்டது ரஜினிக்கே பிடிக்காது. மேலும் இவர்கள் இவ்வாறு செய்வது ரஜினியின் பெயருக்கும், புகழுக்கும் கலங்கத்தை விளைவிக்க கூடும். ஆகையால் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினியை புகழ்வது போல அவரது ரசிகர்களுக்கு நாசுக்காக புரியும்படி சீமான் இந்த விஷயத்தை எடுத்து வைத்துள்ளார். ஆனாலும் ஒரு பத்திரிக்கையாளரை அவமானப்படுத்திய கோபம் அவருடைய அறிக்கையில் நன்கு தெரிகிறது. மேலும் இந்த விஷயத்திற்காக ரஜினி ரசிகர்கள் பிஸ்மி இடம் மன்னிப்பு கேட்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : பிறந்தநாளுக்கு கூட செய்யாததை புத்தாண்டுக்கு செய்து காட்டிய ரஜினி.. சூப்பர் ஸ்டார் என நிரூபித்த தருணம்

Trending News