வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யா கூட நடிக்க மாட்டேன்னு மறுத்த நடிகை.. அந்த ரோலே வேண்டாம் என நிராகரித்த கியூட் ஹீரோயின்

Actor Surya: நடிகைகள் பொருத்தவரை பெரிய ஹீரோ படங்களில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டு வருவார்கள். அப்படி நடித்தால் ஈசியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் தொடர்ந்து அவர்களுடைய மார்க்கெட்டும் உயர்ந்துவிடும். இதுதான் நடிகைகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சீக்ரெட் ஆக ஃபாலோ பண்ணி வருவார்கள்.

அதிலும் சூர்யா மாதிரி ஒரு ஹீரோவுடன் நடிப்பதற்கு இளம் நடிகைகள் ஆவலாக எதிர்பார்த்து இருப்பார்கள். ஆனால் இந்த நடிகை சூர்யாவுடன் ஹிட் படத்தில் நடிப்பதற்கு தேடி வந்த வாய்ப்பை ஈசியாக தட்டிக் கழித்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் சூர்யாவுடன் நடித்தால் அவருக்கு ஜோடியாக தான் நடிப்பேன்.

Also read: சூர்யா கெஞ்சி கேட்டும் மறுத்தேன்.. இப்ப நினைத்து வெட்கத்தில் தலைகுனியும் உதயநிதி

இந்த செகண்ட் ஹீரோயின் சப்ஜெக்ட் எல்லாம் என்னிடம் வந்து கேட்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்களை விரட்டி அடித்திருக்கிறார். அன்றிலிருந்து சூர்யாவிற்கு இந்த நடிகை மேல் கொஞ்சம் கடுப்புதான். அதாவது சூர்யா நடிப்பில் வெளியான ஜில்லுனு ஒரு காதல் படம் செம சூப்பர் ஹிட் படமாக வெற்றியடைந்தது.

இப்படத்தில் பூமிகா கேரக்டருக்கு முதலில் கேட்கப்பட்ட நடிகை அசின் தான். ஆனால் அவர் ஜோதிகா கதாபாத்திரம் கொடுத்தால் நான் நடிப்பேன். மற்றபடி செகண்ட் ஹீரோயின் சப்ஜெக்ட்
எனக்கு வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அதற்கு இவர் கூறிய காரணம் சூர்யாவுடன் நான் நடித்த கஜினி படம் மிகப் பெரிய பெயரை எனக்கு வாங்கி கொடுத்தது.

Also read: ஆர்ப்பாட்டமே இல்லாமல் பணத்தை வாரி இறைக்கும் ஜிவி பிரகாஷ்.. விட்டா அடுத்த சூர்யா இடத்தை பிடிச்சுருவாரு போல

அதைத் தொடர்ந்து நான் அவருக்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்று தீர்க்கமாக சொல்லிவிட்டார். அதன் பிறகு இவருடைய கேரக்டருக்கு பூமிகா நடித்தார். ஆனால் இந்த படம் பூமிக்காவிற்கு மிகப்பெரிய பெயர் வாங்கி கொடுத்திருக்கிறது.

ஒருவேளை அசின் நடித்திருந்தால் இன்னும் இவருக்கு பெயர் கிடைத்திருக்கும். ஆனாலும் இதற்கு அடுத்த படமான வேல் படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். ஆக மொத்தத்தில் பிடிவாதமாக இருந்து சூர்யாவுடன் ஜோடி போட்டு கலக்கி விட்டார்.

Also read: வாடிவாசலுக்கு தொடர்ந்து வரும் பிரச்சனை.. சூர்யாவுக்கு கட்டம் சரியில்லையோ

Trending News