வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது.. மிகப்பெரிய சவாலை சந்திக்க போகும் பாக்கியா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவு உச்சகட்ட ட்விஸ்ட் அரங்கேற உள்ளது. அதாவது பாக்கியா சமையல் போட்டியில் ஜெயித்து ஒரு மினி ஹாலில் நடக்க உள்ள திருமணத்திற்கு சமைக்க உள்ளார்.

இதனால் பாக்யாவின் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது. கண்டிப்பாக இதில் நன்றாக சமைத்து மொத்த ஆர்டரையும் பாக்கியா கைப்பற்றுவார் என நம்புகிறார்கள். மறுபக்கம் பாக்யாவின் புருஷன் கோபிக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

Also Read :மகனுக்கு முன்னாடியே 2வது திருமண பத்திரிக்கை அடிக்கும் அப்பன்.. கேடுகெட்ட குடும்பமா இருக்குதே

முதல் முகூர்த்தம் நல்ல முகூர்த்தமாக இருக்கிறது என ராதிகாவின் அண்ணன் கூறுகிறார். இதனால் கோபி மற்றும் ராதிகாவின் அண்ணன் இருவரும் திருமண மண்டபத்தை புக் செல்கிறார்கள். அதாவது பாக்கியா காண்ட்ராக்ட் எடுத்த இடத்திற்கு தான் இவர்கள் சென்று மண்டபத்தை புக் செய்கிறார்கள்.

மேலும் மண்டபத்தின் ஓனர் பாக்கியாவை அழைத்து மினி ஹாலில் சமைப்பதற்கான ஆர்டரை கொடுத்த அட்வான்ஸ் கொடுக்கிறார். தனக்கு கிடைத்த பெரிய ஆர்டர் என பாக்யா இதை நினைத்து பெருமை கொள்கிறார். ஆனால் கோபியின் திருமணத்திற்கு தான் பாக்யா சமைக்க போகிறார் என்பது அவருக்கு தெரியாது.

Also Read :கதிரை கழட்டிவிடும் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சினையை கிளப்பி விட்ட விஷப்பூச்சி

எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது, ஏனென்றால் தனது கணவனின் கல்யாணத்திற்கு மனைவி பாக்கியா சமைக்க போகிறார். இது கோபி, ராதிகாவின் திருமணம் என்று பாக்கியாவிற்கு தெரிந்தால் அவரது மனநிலை என்னவாக இருக்கும்.

பாக்கியாவால் இந்த திருமணத்தில் சமைக்க முடியுமா. ஆனால் இந்த மினி ஹாலில் சமைத்து இந்த ஆர்டரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் பாக்கியா இருக்கிறார். தற்போது மிகப் பெரிய சவாலை ஏற்று நிற்கிறார். இதனால் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Also Read :பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்ட சம்பளம்.. கோடியில் புரளும் உலகநாயகன்

Trending News