வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அசல் சும்மா இருந்தாலும் இவ விட மாட்டா போல.. பிக்பாஸ் வீட்டில் மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி

இது வீடா இல்ல மெண்டல் ஹாஸ்பிடலா அப்படிங்கற ரேஞ்சுக்கு இருக்கு பிக்பாஸ் வீடு. ஒரு பக்கம் வீட்ல என்ன நடந்தாலும் கண்டுக்காம இருக்கிற போட்டியாளர்கள், இன்னொரு பக்கம் செருப்பை கழட்டி அடிக்கிற அளவுக்கு சண்டை போட்டுட்டு அப்புறம் அண்ணன் தங்கச்சி என்று பாசமழையை கொட்டுற போட்டியாளர்கள்.

இப்படி பிக் பாஸ் வீடு எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறது. அதில் இரண்டே இரண்டு போட்டியாளர்கள் மட்டும் எதற்காக இந்த வீட்டுக்குள் வந்தோம் என்று தெரியாமல் தனி ஒரு உலகில் மிதந்து கொண்டிருக்கின்றனர். பிக்பாஸ் வீட்டுக்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே அசல் கோலாரின் நடவடிக்கைகள் பலருக்கும் வெறுப்பை கொடுத்து வருகிறது.

Also read : பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் 2வது போட்டியாளர்.. பெண்களிடம் அத்துமீறிய மன்மத குஞ்சு

பெண்களை தடவுவது, சீண்டுவது என்று அவர் அத்து மீறிக் கொண்டிருக்கிறார். அதிலும் நிவாஸினியை கடிப்பது, கட்டிபிடிப்பது என்று அவர் செய்யும் லீலை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் அசல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எதிர்ப்பு குரல்கள் வலு பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அசல் மற்றும் நிவாஸினியின் காதல் லீலை சம்மந்தப்பட்ட ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதில் நட்ட நடு ராத்திரியில் அசல் போர்வையை முகத்தில் மூடியபடி படித்திருக்கிறார். அவரின் அருகில் வரும் நிவாசினி அந்த போர்வையை எடுத்துவிட்டு பெட்டில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு சிரித்தபடி ஏதோ பேசுகிறார்.

Also read : சாந்தி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. ஜி பி முத்துவை விட இவ்வளவு அதிகமா?

இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன நடக்குது இங்க. அவன் சும்மா இருந்தாலும் இவ விடமாட்டா போல என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இதுவரை அசலின் வக்கிர புத்தி தெரியாமல் நிவாஷினி எதார்த்தமாக பழகுவதாக பலரும் கூறி வந்தனர். ஆனால் இந்த வீடியோவில் இருப்பதை பார்த்தால் இருவரும் தெரிஞ்சே தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

பெண்கள், குழந்தைகள் அனைவரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இது போன்ற கேவலமான காட்சிகள் காட்டப்படுவது பல எதிர்ப்புகளை கிளப்பி இருக்கிறது. மேலும் பிக் பாஸ் வீட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் அசல் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read : பிக்பாஸ் வீட்டில் அத்துமீறிய போட்டியாளர்.. ரெட் கார்டு கொடுத்த கமல்

Trending News