திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய் முன்னாடி பிகினி போட்டா கூட.. ஒவ்வொரு ஆணும் விஜய் மாதிரி இருந்தா – மனதை திருடுன நடிகை

சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் தொடர்ந்து, திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். மேலும் மக்களின் ஆதரவை பெற்று முன்னேறி வரும் விஜய் தொடர்ந்து மக்களுக்காக பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுத்தான் வருகிறார்.

அப்படி தான் தற்போது விஜய் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசி இருந்தார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில், தினமும் எதோ ஒரு பெண், வன்முறைக்கும் அத்துமீறலுக்கும் உள்ளாகிறார். இதை ஆளும் அரசு கவனத்தில் கொண்டு, பெண்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ‘

இதை தொடர்ந்து இவரது இந்த பதிவை பலர் பாராட்டி வரும் சூழலில், நடிகை காயத்ரி ஜெயராமன் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் விஜய் பற்றி பேசிய விஷயம் மக்கள் கவனத்தை பெற்று வருகிறது.

பிகினி போட்டு கூட நடிக்கலாம்

எந்த நடிகருடன் மிகவும் comfortable-ஆக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை காயத்ரி ஜெயராமன், “விஜயுடன் நடிக்கும்போது மிகவும் comfortable-ஆக இருக்கும். அவர் பார்வையில் அவ்வளவு கண்ணியம் இருக்கும். அவருக்கு தவறாக பார்க்கவே தெரியாது..”

“அவருடன் நடிக்கும்போது, அவ்வளவு safe ஆக நான் feel செய்வேன். நான் மட்டுமல்ல எல்லா நடிகைகளும் அப்படி தான். மரியாதையுடனும் கண்ணியத்துடனும் அவரை போல வேறு யாராலும் நடந்துகொள்ள முடியாது. அவர் முன்னாள் ஒரு பிகினி போட்டு நடிக்க கூட கூச்சம் வராது. தைரியமாக இருக்கலாம். ஏன் என்றால் அவர் பார்வை அப்படி.. ஒவ்வொரு ஆணும் விஜயை போல இருந்தால், இங்கு பெண்களுக்கு எந்த பிரச்சனையும் வராது..” என்று கூறி இருக்கிறார்.

விஜயின் கருத்துக்கள் தற்போது கவனம் பெற்று வரும் நிலையில் இந்த விடியோவும் வைரலாகி வருகிறது.

Trending News