திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

புதுசு புதுசா கிளம்புராங்களே.. தளபதி 66ல் பயமுறுத்தும் மாஸ் வில்லன்கள் கூட்டணி

தளபதி66  படத்தில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார், இது மட்டுமில்லாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்டேட் கிடைக்கிறது, இந்த திரைப்படத்தில் விஜய் அண்ணனாக நடிகர் ஷாம் நடிக்கிறார், சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படம் குடும்ப பின்னணியை மையமாகக் கொண்டது. இந்த திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர்கள் பிரபு, பிரகாஷ்ராஜ், நடிகை சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து நடித்து வருகிறார்கள்.

இவர்களுடன் நடிகர் யோகிபாபும், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தளபதி 66 திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பதை உறுதி செய்துள்ளார். பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது தளபதி 66 படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது,

இப்போது இந்தத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார், இவர் தாலாட்டு, அரண்மனை காவலன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த சிவரஞ்சினியின் கணவர் ஆவார்.

ஸ்ரீகாந்த் மேகா சமீபத்தில் வெளிவந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். அதனால் இவர் இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிப்பாரா அல்லது வில்லனாக நடிப்பாரா என்பதில் பெரிய சந்தேகம் இருந்து வருகிறது. இதுமட்டுமின்றி இந்த படத்திற்காக ஒரு புது வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறார்களளாம்.

இந்நிலையில் இத்திரைப்படத்தை  2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடபோவதாக ஒரு கூடுதல் தகவல் வெளியாகி ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தில் இவ்வளவு பெரிய நடிகர் கூட்டத்தை போட்டதால் படத்தை சொதப்பி விடாமல் இருந்தால் சரி என்று ரசிகர் பட்டாளம் பயத்தில் இருந்து வருகிறது.

Trending News