திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூப்பர் ஸ்டார் இடத்திற்கு நடக்கும் போட்டா போட்டி.. சேட்டையை ஓரம் கட்டி பக்குவமாக மாறிய நடிகர்

அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டார் தான் என்று சொல்லும் அளவுக்கு ரஜினிக்கு திரையுலகில் மாஸ் இருக்கிறது. அதனாலேயே அவருடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்று முன்னணி நடிகர்களில் இருந்து வளர்ந்து வரும் நடிகர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது ஒரு ஹீரோவும் தன்னுடைய சேட்டையை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மனப்பக்குவத்துடன் நடந்து கொண்டிருக்கிறாராம். இதுதான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஒரேயடியாய் ஆளே மாறிவிட்டாரே என பலரும் வாயில் கை வைக்காத குறையாக பேசி வருகின்றனர்.

Also read: தலைவரை கை விடாமல் காப்பாற்றிய நெல்சன்.. மொத்தமாய் ஆடிப்போன சன் பிக்சர்ஸ்

இந்த பெருமையை பெற்றிருப்பவர் வேறு யாரும் அல்ல நடிகர் சிம்பு தான். ஆரம்ப காலத்தில் இவர் பற்றி வெளிவராத சர்ச்சைகளே கிடையாது. அதிலும் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வர மாட்டார் என பல குற்றச்சாட்டுகள் இவர் மேல் இருந்தது. ஆனால் அதெல்லாம் இப்போது கிடையாது. சிம்பு என்றாலே பிரச்சினை என்ற காலம் மாறி இப்போது அவர் படிப்படியாக முன்னேறி வருகிறார்.

மேலும் இப்போது அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் நிதானத்துடன் எடுக்கிறாராம். அதிலும் முக்கியமாக ஏதாவது நல்ல படங்கள் வந்திருந்தால் உடனே சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் ஹீரோவுக்கு போன் செய்து மனதார பாராட்டுகிறாராம். அந்த வகையில் அயோத்தி பட இயக்குனருக்கு போன் செய்து இது மாதிரி நல்ல படங்கள் செய்ய வேண்டும் என்று அவர் பாராட்டி இருக்கிறார்.

Also read: இரண்டாம் நிலை டாப் ஹீரோக்கள்.. முதல்முறையாக 100 கோடி வசூலை தாண்டிய ஐந்து படங்கள்

இப்படி சூப்பர் ஸ்டார் எவ்வாறு நடந்து கொள்வாரோ அதே போன்று இவரும் மாறி இருக்கிறார். மேலும் ரஜினியின் வயதிற்கு ஏற்ற முதிர்ச்சியும், அனுபவமும் இப்போதே சிம்புவிடம் காணப்படுவதை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். அதை தொடர்ந்து சமீபத்தில் அவர் ரசிகர்களை சந்தித்து பிரியாணி பரிமாறியது கூட பாராட்டுகளை பெற்று வருகிறது.

இப்படி தன்னுடைய நடத்தையை மாற்றிக் கொண்டு முன்னேறி வரும் சிம்பு விரைவில் அவர் நினைத்த இடத்தை தொடுவார் என்று திரை உலகில் வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கமலுடன் கைகோர்த்து இருக்கும் இவர் அப்படத்திற்காக தன் முழு முயற்சியையும் கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறாராம்.

Also read: சிம்பு படத்தின் நடிகையை வச்சு செய்யும் ரசிகர்கள்.. இனி அந்த நடிகை எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பில்லை

Trending News