வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

என்னோட பர்சனல் பத்தியே பேசுறாங்க.. தடுக்க முடியல.. தொடர்ந்து விமர்சனங்களை சந்திக்கும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து தற்போது கோலிவுட்டின் பரபரப்பு பேச்சுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த மறுநாளே என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

அது மீண்டும் ஒரு பேசுபொருளாக மாறியது. இதை தொடர்ந்து ஜெயம் ரவி, இதற்க்கு பதிலடி கொடுத்தார். நான் அனைத்தையும் பேசிய பிறகு தான் இந்த நோட்டீஸ்மக்கள் முன்னிலையில் வெளியிட்டேன்.  நான் வீட்டை விட்டு விரட்டியடிக்க பட்டேன் என்றும் சொன்னார்.  இது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது தனது கேரியரை மட்டும் கவனித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவர் சொன்ன சில கருத்துக்கள் வைரலாகி வருகிறது. 

என்னோட பர்சனல் வாழ்க்கையை பற்றியே தான் பேசுகிறார்கள்..

என்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களை பொதுவெளியில் பேசும் நபர்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் எது செய்தாலும் அது பேசுபொருளாகும்.  அவர்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை. ஒவ்வொருவரிடம் சென்று நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக இருங்கள் என்று என்னால் கூற முடியாது.

புரிதல் கொண்ட சில பேர் அதனைச் செய்வதில்லை. ஆனால் சிலர் பிரச்சினையின் ஆழம் தெரியாமல், என்னுடைய பர்சனல் விஷயங்களை பேசுகிறார்கள். என்னைப் பற்றி எனக்குத் தெரிந்த பிறகு, மற்றவர்கள் சொல்வதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று அவர் பேசியுள்ளார். 

இவர் ஒரு சில சினிமா விமர்சகர்களை தான் சொல்கிறார் என்று நன்றாகவே தெரிகிறது. உண்மையில் ஜெயம் ரவியை நினைத்தாலும் பாவமாக தான் இருக்கிறது.  ஏற்கனவே நொந்து போயிருக்கும் அவரையே நோண்டி கொண்டிருக்கிறார்கள். 

Trending News