செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கிண்டல் கேலிக்கு ஆளான அஞ்சலி.. வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதும்

தமிழ் சினிமாவில் அங்காடித்தெரு என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. அந்த திரைப்படத்தை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், பலூன் உட்பட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழை தவிர தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்ட் வந்த இவர் சமீப காலமாக மற்ற மொழி திரைப்படங்களுக்கு அதிக கவனம் கொடுத்து வருகிறார்.

நன்றாக நடிக்கும் நடிகை என்று பெயரெடுத்த அவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் நல்ல படங்களுக்காக காத்திருந்த அவருக்கு தற்போது பிரபல காமெடி நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் மண்டேலா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இது தவிர தமிழில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் அனைத்து நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கும் இவருடன் தான் நடிகை அஞ்சலி ஜோடி சேருகிறார். இதைப் பற்றி கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் உங்க நிலைமை இப்படி ஆயிடுச்சே என்று சோசியல் மீடியாவில் கலாய்த்து வருகின்றனர்.

இதனால் கோபப்பட்ட அஞ்சலி அவருடன் நடித்தால் என்ன தப்பு, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவே யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் படத்தில் என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் போதும் என்று தன்னை கலாய்த்தவர்களுக்கு அஞ்சலி பதிலடி கொடுத்திருக்கிறார்.

Trending News