ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தடபுடலாய் இருக்கும் தம்பி மயில் வாகனம்.. ஹனிமூன் உட்பட நயன்தாராவுக்காக சகலமும் ரெடி

7 வருடங்களாக காதலித்து கொண்டிருக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரின் நிச்சயதார்த்தம் நிறைவடைந்த நிலையில், கல்யாணம் ஒருவழியாக முடிவாகியது. விக்னேஷ் சிவன் தனது நண்பர்கள் அனைவரிடமும் எனக்கு மே 9 கல்யாணம் என்ற செய்தியைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். திருமணத்தை திருப்பதியில் நடத்த முடிவு எடுத்து இருக்கின்றனர்.

இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நயன்தாராவின் அசிஸ்டன்ட் மயில்வாகனம் இந்த வேலைகளை எல்லாம் மும்முரமாக செய்து கொண்டிருக்கிறார். எல்லாவிதமான சகல ஏற்பாடுகளையும் அவர் தான் தன் தோளில் சுமந்துகொண்டு செய்கிறாராம்.

திருப்பதியில் தான் அவர் தங்கி இருக்கிறாராம். திருமண ஏற்பாடுகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்ப்பதற்காகவே இந்த வாரத்தில் மட்டும் இரு முறை நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி சென்று வந்திருக்கின்றனர்.

திருமணத்திற்கான வேலைகளும் தடபுடலாக நடந்து கொண்டிருக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அருகில் ரீங் ரோட்டில் உள்ள மடம் ஒன்றில் இருவரின் கல்யாணம் நடைபெற உள்ளதால் திருமணத்திற்காக முன்கூட்டியே இவர்கள் முன் பதிவு செய்திருக்கின்றனர்.

இந்த கல்யாணத்திற்கு எல்லோருக்கும் அழைப்பு கிடையாது. நெருங்கிய வட்டாரங்களுக்கு மட்டுமே அழைப்பு. இந்நிலையில் எக்மோரில் தங்கியிருந்த நயன்தாரா, அங்கே தனது அப்பார்ட்மெண்ட் நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைத்துள்ளார்.

கல்யாணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் செல்வதற்குக் கூட ஏற்பாடுகள் நடந்து விட்டதாம். வெளிநாடுகளில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் ஹனிமூன் கொண்டாட திட்டமிட்டுள்ளார். தற்போது சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக நயன்தாராவின் திருமணம் விஷயம்தான் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Trending News