ஒவ்வொரு ஆண்டும் கரீபியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் மேற்கிந்திய தீவுகளில் 20 ஓவர் போட்டி அதிரடியாகவும், ஆரவாரமாகவும் நடைபெறும். கெயில், பொல்லார்டு, டூப்ளெசிஸ் போன்ற முன்னணி வீரர்கள் விளையாடுவதால் இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.
இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நைட் ரைடர்ஸ் மற்றும் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் ஆடிய நைட் ரைடர்ஸ் அணி 159 ரன்கள் எடுத்தது. பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணி 6 ஓவர் முடிவில் 67 ரன்களை விளாசியது.
பேட்ரியாட்ஸ் அணியின் துவக்க வீரர் ஏவின் லீவிஸ், 5 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்சர்களுடன், 52 பந்துகளில்102 ரன்களை விளாசினார். இதனால் பேட்ரியாட்ஸ் அணி 5 ஓவர்கள் மீதமுள்ள நிலையிலேயே போட்டியை வென்று அசத்தியது.
போட்டி முடிந்தவுடன் பேசிய லீவிஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற ஒரு ரன்கள் தேவை என்ற போது, பொல்லார்ட் ஒரு நோபால் வீசியதாகவும், இதனால் 97 ரன்களில் இருந்த தம்மால் சதம் அடிக்க முடியவில்லை எனவும் கூறினார்.
அதனை லீவிஸ் மனதில் வைத்து நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்தார். அதிலும் பொலார்ட் பந்துவீச்சில் 2 சிக்சர்களை சிறப்பாக அடித்து தனது ஐந்து வருட பகையை தீர்த்து அணியை வெற்றிபெற வைத்தார்.