சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.. மணப்பாக்கம் மருத்துவமனையில் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு வெங்கட கிருஷ்ண சுவாமி சம்பத் இளங்கோவன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார்

2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் இவர் காங்கிரஸ் கட்சியின் பிரசிடெண்ட் ஆக நியமிக்கப்பட்டார் சத்தியமங்கலம் பகுதியில் எம்.எல்.ஏவாக இருந்தவர். தற்சமயம் ஈரோடு கிழக்குப் பகுதியில் எம்எல்ஏவாக இருந்து வந்தார்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அதன் பின்னும்ல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வந்தார்.

இந்நிலையில் திடீரென அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நிமோனியா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

- Advertisement -

Trending News