வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

Jayalalitha: உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கா.? அசர வைக்கும் பதில் சொன்ன ஜெயலலிதா

Jayalalitha: தமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகப் பெரும் பங்கு இருக்கிறது. இரும்பு பெண்மணியாக இவர் செய்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதேபோன்று தைரியத்திற்கு எடுத்துக்காட்டாகவும் இவரை சொல்வதுண்டு. அப்படிப்பட்ட சிங்கப்பெண் தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சொன்ன பதில் தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஒருமுறை ஜெயலலிதா மகளிர் கல்லூரி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கிறார். அப்போது நிகழ்ச்சியின் முடிவில் மாணவிகள் அனைவரும் அவரிடம் பல கேள்விகளை கேட்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா சொன்ன பதில்

அதற்கு ஜெயலலிதாவும் பொறுமையாக பதில் அளித்திருக்கிறார். அந்த சமயத்தில் ஒரு பெண் மேடம் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பினாராம்.

இதைக் கேட்டு அங்கு இருந்தவர்கள் அனைவரும் பதட்டம் அடைந்து இருக்கின்றனர். ஆனால் ஜெயலலிதாவோ சிரித்தபடியே குடிப்பழக்கம் அளவோடு இருந்தால் பிரச்சனை இல்லை என அலட்டிக்காமல் பதில் சொல்லி இருக்கிறார்.

இது அங்கிருந்தோர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமின்றி இதிலிருந்து அவர் குடிப்பரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா பற்றிய இந்த செய்தி தற்போது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.

Trending News