புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

எக்ஸ் காதலியை தூக்கி விட நினைத்த கார்த்தி.. மனைவியால் தவிடு பொடியான திட்டம்

நடிகர் கார்த்திக்கு கடந்த சில வருடங்களாக எந்த படமும் ஓடாத நிலையில் பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. வந்திய தேவனாக பெண்களின் மனதை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதை தொடர்ந்து தற்போது கார்த்திக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் ஜப்பான் என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை ஒருவர் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். மேலும் பிரம்மாண்ட படத்தில் நடித்தால் மீண்டும் கேரியரை பிடித்து விடலாம் என்று நினைத்த அவருக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

Also Read : இனி சந்தானத்துடன் நடிக்கவே மாட்டேன் என சொன்ன கார்த்தி.. மீண்டும் சேராமல் போனதன் பின்னணி காரணம்

தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ள நடிகருடன் ஜோடி போட்டு நடித்தால் மார்க்கெட் உயர்ந்து விடும். அதற்காக கார்த்தியை நாடி உள்ளார் அந்த நடிகை. அதாவது சிறுத்தை, பையா போன்ற படங்களில் கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்தவர் தமன்னா. அடுத்தடுத்த படங்கள் ஒன்றாக நடித்ததால் இவர்கள் காதலித்து வருவதாக செய்தித்தாள்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இவர்கள் திருமணம் செய்து கொள்ள கார்த்தியின் தந்தை சிவக்குமார் தடையாக இருந்ததாகவும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் தந்தையின் பேச்சை மறுக்க முடியாத கார்த்தி தமன்னாவை விட்டு விட்டு வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

Also Read : வெளிப்படையாய் உண்மையை தைரியமாக பேசும் 6 நடிகர்கள்.. எல்லா மேடைகளிலும் அடித்து நொறுக்கும் சத்யராஜ்

அதன் பிறகு தமன்னாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருடைய மார்க்கெட் தமிழ் சினிமாவில் சுத்தமாக காலியானது. பாகுபலி படத்தின் மூலம் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என தமன்னா எதிர்பார்த்த நிலையில் இதுவும் இல்லாமல் போய்விட்டது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் கதாநாயகியாக தமன்னாவுக்கு இப்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு கம்மிதான். ஆகையால் கார்த்தியிடம் மீண்டும் நாம் இருவரும் ஜோடி சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கார்த்தியும் ஓகே என்று வாக்கு கொடுத்த நிலையில் இதற்கு அவரின் மனைவி ரஞ்சனி முட்டுக்கட்டை போட்டுள்ளார். ஏனென்றால் ஏற்கனவே இருவரை வைத்து செய்தித்தாள்களில் கிசுகிசு வந்த நிலையில் மீண்டும் தமன்னாவுடன் நடிக்க வேண்டாம் என கார்த்தியின் திட்டத்தை தவிடு பொடியாக்கி விட்டாராம்.

Also Read கமல் மாதக்கணக்கில் உழைத்ததை, மூன்றே நாள் கால் சீட்டில் தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சிவகுமார் சொன்ன ரகசியம்

Trending News