வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விறுவிறுப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 ஆடிஷன்.. யாரு கலந்துக்குறாங்க, எப்ப துவங்கப்படுகிறது தெரியுமா.?

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரைட் என்டர்டைன்மெண்ட் ஷோ ஆன பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது 7-வது சீசனுக்கான ஆடிஷன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் யார் கலந்து கொள்ள போகிறார்கள் எப்போது துவங்கப் போகிறது என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

வழக்கம்போல் இல்லாமல் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளர்களை வித்தியாசமாக தேர்ந்தெடுக்க விஜய் டிவி முடிவெடுத்துள்ளது. கடந்த சீசனில் மக்களில் ஒருவராக தனலட்சுமி கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார். அதேபோன்று இந்த முறை பொதுமக்களில் இருந்து மூன்று பேரை போட்டியாளர்களாக தேர்வு செய்யப் போகின்றனர்.

Also Read: லிவிங் ரிலேஷன்ஷிப்பிற்கு சம்மதித்த அம்மா.. திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் வாழும் பிக்பாஸ் ஜோடி

அதை போன்று பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் ஆக இருக்க வேண்டும் என மக்கள் மிகவும் விரும்பிய அரசியல்வாதியும் செய்தி நெறியுரையாளர் விக்ரமன் இரண்டாவது இடத்தை பிடித்தார். எனவே அரசியல்வாதி பிக் பாஸ் வீட்டில் இருந்தால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யம் ஆக இருக்கும் என்பதை கடந்த சீசனில் தெரிந்து கொண்ட விஜய் டிவி இந்த முறை மக்களுக்கு பரிச்சயமான பொலிட்டீசியன் ஒருவரை போட்டியாளராக தேர்வு செய்துள்ளனர்.

இது மட்டுமல்ல சீசன் 5ல் முதல் முதலாக திருநங்கை நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் சில காரணத்தால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளிவந்து விட்டார். ஆனால் சீசன் 6 திருநங்கை சிவின் கலந்துகொண்டு டாப் 3 இடத்தைப் பிடித்தார்.

Also Read: நீச்சல் உடை, கையில் கிளாஸ்.. சம்மரை கிளாமராக என்ஜாய் பண்ணும் விஜே மகேஸ்வரி

இதனால் ரசிகர்கள் திருநங்கைகளையும் பிக் பாஸ் வீட்டில் இருப்பது பிடித்திருப்பதை உணர்ந்த விஜய் டிவி இந்த முறையும் மீடியாவில் இருக்கும் திருநங்கையை சீசன் 6ல் களம் இறக்க முடிவு செய்துள்ளனர். இந்த முறை ஷகீலாவின் வளர்ப்பு மகள் திருநங்கை மிளா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக சினிமா பிரபலங்கள், அரசியல்வாதி, திருநங்கை என குறைந்தது 20 போட்டியாளர்களையாவது தேர்வு செய்து வரும் ஜூலை மாதத்தில் நிகழ்ச்சியை துவங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆடிஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.

Also Read: லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த பிக்பாஸ் போட்டியாளர்.. ட்வீட் மூலம் உறுதி செய்த நடிகை

Trending News