செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெடிக்கும் சக்களத்தி சண்டை.. பாரதிகண்ணம்மா சீரியல் ஏற்படும் அதிரடி திருப்பம்

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பா அவருடைய அம்மா ஷர்மிளா ஏற்பாடு செய்த கல்யாணத்திற்கு சம்மதித்து மணமேடை வரை வந்திருக்கிறார். இதனால் குடும்பமே வெண்பாவை முழுமையாக நம்புகிறது.

ஆனால் கண்ணம்மாவுக்கு மட்டும் வெண்பா பொய் பித்தலாட்டம் ஆடுகிறார் என்பது தெரிகிறது. எனவே கல்யாணத்திற்கு ரெடியான மணப்பெண்ணாக வெண்பாவை கண்ணம்மா சந்தித்த பேசுகிறார். அப்போது அவர்களுக்கிடையே சக்களத்தி சண்டை வெடிக்கிறது.

Also Read: பத்த வச்ச கண்ணம்மா.. பற்றி எரியும் வெண்பா வீடு

அதன்பிறகு வெண்பாவிற்கு பார்த்த மாப்பிள்ளை ஆன ரோகித் வருங்கால மனைவி என்று அத்துமீறி முத்தம் கொடுக்க பார்க்கிறார். அலறியடித்த வெண்பா, உடனே பாரதிக்கு பயத்தில் போன் மூலம் தொடர்பு கொள்கிறார்.

அப்போது தன்னை கால வாரி விட்றாத பாரதி என்று உச்சகட்ட நடிப்பை வெளிக் காட்டுகிறார். ஆனால் பாரதி DNA டெஸ்ட் ரிப்போர்ட்டுக்காக காத்திருக்கிறார். அந்த ரிசல்ட்டை வைத்துதான் வெண்பாவை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்கின்ற முடிவை எடுக்கப் போகிறார்.

Also Read: கனவிலேயே கோட்டை கட்டும் வெண்பா.. பாரதியிடம் கிடைக்கும் டிஎன்ஏ ரிப்போர்ட்

அதில் கண்ணம்மாவின் மீது எந்த தப்பும் இல்லை என்றும் அவருடைய இரண்டு மகள்களும் பாரதிக்கு பிறந்ததுதான் என்பது வெளிப்படப் போகிறது. அப்போது கூட வெண்பா தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாரதிதான் அப்பா என்று கோல் அடிக்க பார்க்கிறார்.

ஆனால் ரோகித் அந்த சமயம் வந்து வெண்பாவின் முகத்திரையை கிழித்தெறிந்து, பாரதி மற்றும் கண்ணம்மாவை சேர்த்து வைப்பார். இவ்வாறு அதிரடி திருப்பத்துடன் கிளைமேக்ஸை நோக்கி நகரும் பாரதிகண்ணம்மா சீரியல் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: என்ன ஜென்மம் டா நீ கைய கடிக்கிற, கட்டிப்பிடிக்கிற.. காமவெறியில் அடுத்தடுத்து வெளிவரும் அசலின் வீடியோ

Trending News