சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அம்பலமான இருட்டுக்கடை திருட்டு பிரியாணி.. சிரிச்சு மலுப்பிய போட்டியாளர்கள், வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

Bigg Boss 8 Tamil: விஜய் சேதுபதி மீது வந்திருக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் கொடுக்கும் விதமாக ஒரு மணி நேர எபிசோடில் நான் கேட்கிற எல்லா விஷயங்களையும் உங்களால் பார்க்க முடியாது. ஆனால் எதை தட்டிக் கேட்கணும் யாரை தட்டி வைக்கணும் என்பதை நான் சரியாக செய்கிறேன் என்பதை எடுத்து சொல்லும் விதமாக அங்கே வந்த பார்வையாளர்கள் மூலம் தெளிவு படுத்திவிட்டார்.

அத்துடன் விஜய் சேதுபதி எந்தவித பாரபட்சமும் பார்க்கவில்லை, மகாராஜா படத்தில் மகளாக நடித்ததற்காக சாச்சினாவுக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்பதையும் நிரூபித்து விட்டார். அந்த வகையில் சனிக்கிழமை எபிசோடில் சாச்சினாவை எந்த அளவிற்கு கண்டிக்க முடியுமோ அதை தரமாக செய்து வறுத்தெடுத்து விட்டார். அத்துடன் அனைவரும் குறும்படம் போட்டு காட்ட வேண்டும் என்று சொன்ன விஷயத்தையும் கேள்வி கேட்டு விட்டார்.

அதாவது கிச்சனில் இன்சார்ச் ஆக இருக்கும் அருண் மற்ற போட்டியாளர்களிடம் ரொம்பவே கரராக நடந்து கொண்டார். அந்த வகையில் சனிக்கிழமையில் கிட்சன் இன்சார்ச் ஆக இருந்த பொழுது நான் யாரையும் ஏமாற்றி சாப்பிடவில்லை. எனக்கு என்று தனியாக எடுத்து வைத்து சாப்பிடும் பழக்கமும் இல்லை. நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறேன் என்று பல வசனங்களை வாய் கூசாமல் அருண் பேசினார்.

ஆனால் அதெல்லாம் பொய் என்பதற்கு ஏற்ப நேற்று விஜய் சேதுபதி இருட்டுக்கடை திருட்டு பிரியாணி விஷயத்தை வெளிக் கொண்டு வந்து விட்டார். அதாவது போட்டியாளர்கள் அனைவரும் தூங்கி நிலையில் சில போட்டியாளர்களான விஷால், ஆனந்தி, அன்சிதா, தர்ஷிகா, சத்யா, அருண், சாச்சனா மட்டும் யாருக்கும் தெரியாமல் இரவில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருக்கிறார்கள். இந்த விஷயம் போன வாரம் நடந்திருந்தாலும் சனிக்கிழமையில் அருண் தன்னை நல்லவர் போல நிரூபித்து பேசியதால், மிட்நைட் பிரியாணி விஷயத்தை நேற்று விஜய் சேதுபதி கேள்வி கேட்டு விட்டார்.

நேர்மை நியாயம் என்று பேசிய அருண் யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டது சரியா என்று விஜய் சேதுபதி கேள்வி கேட்க அதற்கு பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்து போய்விட்டார். அத்துடன் இவர்கள் இந்த மாதிரி ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்கள் என்று மற்ற போட்டியாளர்கள் தெரியாத நிலையில் அவர்களுக்கும் அதிர்ச்சியாகி போய்விட்டது.

ஆனாலும் விஜய் சேதுபதி இந்த விஷயத்தை கொஞ்சம் சீரியஸாக கேட்டிருந்திருக்கலாம், ஜாலியாக பேசியதால் திருட்டுப் பிரியாணியை செய்து சாப்பிட்ட போட்டியாளர்களும் சிரிச்சு மலுப்பி விட்டார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி இந்த விஷயத்தை அசால்ட்டாக கேட்டுக் கொண்டு விட்டதால் கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

Trending News