வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பாட்ஷாவுக்கும் லியோவுக்கும் இருக்கும் ஒற்றுமை.. லோகேஷுக்கு கொடுக்கப்பட்ட உச்சகட்ட மன அழுத்தம்

Leo-Lokesh: ஏறிய வேகத்திலேயே சறுக்கிய கதையாக தான் இருக்கிறது லோகேஷின் தற்போதைய நிலமை. விஜய்யுடன் கூட்டணி அமைத்து அவர் இயக்கியிருந்த லியோ நேற்று வெளியானது. ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய அளவில் ஆர்வத்தை தூண்டி இருந்த இப்படம் தற்போது பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

அதிலும் முக்கியமாக படத்தின் கதை பாட்ஷாவுடன் நிறைய இடத்தில் ஒத்து போகிறது. பிளாஷ்பேக் காட்சிகளிலிருந்து ஒவ்வொன்றும் இது தலைவர் படம் தான் என்று நினைக்க வைக்கிறது. இதுவே சில பின்னடைவை சந்தித்த நிலையில் இரண்டாம் பாதியை லோகேஷ் கோட்டை விட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அது மட்டுமின்றி நிச்சயம் இதை லோகேஷ் இயக்கி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என அடித்து சொல்ல முடிகிறது. ஏனென்றால் முதல் பாதியை அவர் ஆரம்பித்த விதமும் வேகமும் இரண்டாம் பாதிக்கான மிகப்பெரும் ஆவலை கொடுத்திருந்தது. ஆனால் அது அனைத்தும் சுக்கு நூறான வகையில் இருந்த இரண்டாம் பாதி அனைவருக்கும் பேரதிர்ச்சி தான்.

அதிலும் எல்.சி.யு கனெக்ட் என்று பார்த்தால் கமல் கட்டாயம் இதில் வருவார் என்ற யூகம் அனைவருக்கும் இருந்தது. ஆனால் கடைசி இரண்டு நிமிடங்களில் அவருடைய குரலை மட்டும் கொடுத்து ரசிகர்களை விரக்தியின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டனர். இதை வைத்து பார்க்கும் போது லோகேஷ் பாதி படத்திற்கு மேல் இயக்கவில்லை என்பது தெளிவாகிறது.

அது மட்டுமல்லாமல் தயாரிப்பு தரப்பிலிருந்து அவருக்கு உச்சகட்ட மன அழுத்தத்தை கொடுத்திருக்கின்றனர். அதாவது ஜெயிலர் வசூலை லியோ முந்துமா என்ற பேச்சு மீடியாவையே புரட்டி போட்டது. அதையே தயாரிப்பாளரும் மறைமுக முதலாளியான விஜய்யின் லோகேஷிடம் கூறியிருக்கின்றனர். இதுபோன்ற அழுத்தங்கள் தான் லியோ சொதப்பலுக்கு முக்கிய காரணம் என்கின்றனர்.

மேலும் லோகேஷிடம் லலித் மீம்ஸ் அனைத்தையும் பார்த்துவிட்டு ஜெயிலரை முந்த வேண்டும் என்று கூறினாராம். உடனே அவர் நீங்கள் எனக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுப்பது போல் மீம்ஸ் வருகிறது அதையும் கவனியுங்கள் என்று அசால்டாக கூறியிருக்கிறார். மேலும் ஒரு பேட்டியில் வசூல் பற்றி எல்லாம் எந்த ஒப்பந்தமும் போடவில்லையே என ஆதங்கத்துடன் கூறியிருந்தார். இது போன்ற காரணங்கள் தான் லியோ மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பின்னணியாக இருக்கிறது.

Trending News