வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஷாக் மேல் ஷாக் கொடுத்த எழில்.. ஆடிப்போன கோபியின் அப்பா!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் கோபி-ராதிகாவுடன் வைத்திருக்கும் தகாத உறவு பாக்யா வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறது. முதலில் எழில், குன்னக்குடி சென்றபோது அங்கு கோபியை ராதிகாவுடன் பார்த்துவிட்டார்.

அப்போதே எழிலுக்கு லேசாக சந்தேகம் வந்தது. அதன் பிறகு சென்னையில் ஒரு ரெஸ்டாரண்டில் ராதிகா-கோபி இருவரும் சந்தித்து நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தபோது, எழிலின் சந்தேகம் உறுதியானது. தற்போது எழில் மட்டுமல்லாமல் கோபியின் அப்பாவிற்கும் கோபி-ராதிகா இடையேயான உறவு தெரிந்துவிட்டது. இன்னிலையில் கோபி மற்றும் கோபியின் அப்பா ராமமூர்த்தி இருவருக்குமிடையே வீட்டில் காரசாரமான விவாதம் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் கோபி, ராமமூர்த்தி வீட்டில் இருப்பவர்களிடம் இந்த விஷயத்தை சொல்ல மாட்டார் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார். ஏனென்றால் இந்த விஷயம் தெரிந்தால் பாக்யாவின் நிமிதி கெட்டுவிடும் என ராமமூர்த்தி நினைக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்தி கோபி, ராமமூர்த்தியை சீண்டிப் பார்க்கிறார். இவர்களுக்கு இடையே நடக்கும் வித்தியாசமான நடவடிக்கை வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது.

குறிப்பாக எழில் இதை கண்டுபிடித்து விட்டார். எனவே எழில், தாத்தா ராமமூர்த்தி இடம் ‘அப்பாவிடம் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?’ என்று கேட்டார். ஆனால் அதற்கு ராமமூர்த்தி சமாளித்தார். ராமமூர்த்தியை புரிந்துகொண்ட எழில், அப்பாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்ற விஷயத்தை போட்டு உடைத்துவிட்டார்.

எனவே எழிலுக்கு எந்த அளவுக்கு உண்மை தெரிந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ராமமூர்த்தி பேசி தெரிந்து கொண்டார். அப்போது எழில் அடுத்தடுத்து சொன்ன விஷயங்கள் அனைத்தும் ராமமூர்த்தியை உறைய வைத்தது. அத்துடன் ராதிகாவின் கணவர் பாக்யா வீட்டிற்கு வந்து எழிலை சந்தித்துப் பேசிய விஷயத்தையும் ராமமூர்த்தி இடம் எழில் சொல்லிவிட்டார்.

எழில் மற்றும் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து இந்தப் பிரச்சினையை எவ்வாறு பேசி பாக்யாவிடம் சொல்லி முடிவு காணப்போகிறோம் என்று பதைபதைத்துப் தவிக்கின்றனர். எனவே அடுத்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேற உள்ளதால், ரசிகர்கள் இந்த சீரியலை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Trending News