வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இதுவரை நிறையாத கஜானாவை நிரப்பிய பகத் பாசில்.. ரஜினி பட சம்பளத்துக்கு வச்ச பெரிய டிமான்ட்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்தனர். அரசியல், சாதி உள்ளிட்டவற்றை மையமாக வைத்து எடுத்த இப்படம் மெகா ஹிட்டானது. இப்படத்தில் என்னதான் ஹீரோவாக உதயநிதி நடித்திருந்தாலும், வடிவேலு மற்றும் பஹத் பாசிலின் கதாபாத்திரம் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

வடிவேலுவின் மாமன்னன் கதாபாத்திரம் நம்மை பல இடங்களில் கண்கலங்க வைத்திருந்தாலும், பஹத் பாசிலின் ரத்தினவேலு கதாபாத்திரம் வில்லத்தனத்தில் நம்மில் பலரை பிரம்மிக்க வைத்தது. இதனிடையே பஹத் பாசிலுக்கு மார்க்கெட் சற்று உயர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப்படமான தலைவர்170 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Also Read: நானும் நடிகன்-டா என கண்ணீர் வரவழைத்த வடிவேலுவின் 6 படங்கள்.. சீரியஸாக நடித்து ரீ என்ட்ரியில் ஜெயித்த மாமன்னன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் அசால்ட்டாக வசூல் செய்து மாபெரும் வெற்றிப் பெற்ற நிலையில், இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் தலைவர்170 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அண்மையில் இப்படத்தின் பூஜை நடந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.

இதனிடையே நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகியுள்ள நிலையில்,இவர் வாங்கியுள்ள சம்பளம் தான் நம் அனைவரின் மூக்கின் மேலும் விரல் வைக்கும் அளவுக்கு லைக்கா நிறுவனம் வாரி இறைத்துள்ளது. மலையாள நடிகரான பஹத் பாசில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

Also Read: ரஜினியை அடிக்க தயங்கிய மூத்த நடிகர்.. தைரியம் கொடுத்து அடி வாங்கிய சூப்பர்ஸ்டார்

அப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து மெகாஹிட்டான விக்ரம் படத்தில் அமர் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். ஆனால் விக்ரம் படத்தை காட்டிலும் கண்களாலே வில்லத்தனத்தை காட்டி மாமன்னன் படத்தில் தன் மார்க்கெட்டை உயரத்திய பஹத் பாசில், தலைவர் 170 படத்துக்காக தயாரிப்பு நிறுவனத்திடம் சம்பள விஷயத்தில் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

இதுவரை பஹத் பாசில் ஒரு படத்திற்காக 3 கோடியிலிருந்து 5 கோடி வரை சம்பளமாக வாங்கிய நிலையில், தற்போது தலைவர்170 படத்துக்காக 8 கோடி வரை சம்பளமாக லைக்கா நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அந்நிறுவனமும் நீங்கள் நடிக்க வந்தால் மட்டும் போதுமென கூறி பஹத் பாசில் கேட்ட சம்பளத்தை தாராளமாக எந்த தயக்கமுமின்றி கொடுத்துள்ளது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை பஹத் பாசில் தற்போது அழகாக பயன்படுத்தி தனது கல்லாவை நிரப்பி வருகிறார்.

Also Read: ஏற்கனவே தளபதியுடன் நடித்துள்ள மாமன்னன் ரத்தினவேல்.. 2ம் முறையாக லோகேஷ் வைத்துள்ள டிவிஸ்ட்

Trending News