வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

Fahad fassil: பகத் பாசில் மோலிவுட்டில் களமிறக்கும் 3 தமிழ் நடிகர்கள்.. குறட்டை நாயகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Fahad fassil: தமிழ் சினிமாவில் இனி அடுத்து எத்தனை படங்கள் ரிலீஸ் ஆனாலும் அதில் பகத் பாஸில் நடித்த கண்டிப்பாக ஹிட் ஆகிவிடும். அந்த அளவுக்கு அவருக்கு இங்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. அவர் நினைத்தால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து, இங்கு இருக்கும் ஹீரோக்களின் மார்க்கெட்டுகளை கீழே இறக்கி விடலாம்.

ஆனால் அவரோ இங்கிருந்து தன் மனதிற்கு நெருக்கமான ஹீரோக்களை மலையாள சினிமா உலகிற்கு கூட்டி செல்வதற்கு திட்டம் போட்டு விட்டார். பான் இந்தியா படம் கான்செப்ட் வந்ததிலிருந்து தொழில் போட்டி என்ற ஒன்று சினிமாவில் இல்லாமல் போய்விட்டது.

தன்னுடைய படத்தில் எந்த ஹீரோ சிறப்பு தோற்றத்தில் வந்தால் படம் ஹிட் ஆகும் என முன்னணி ஹீரோக்கள் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தார்கள். அதிலும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படி மேலே தன்னுடைய ஜெயிலர் படத்தில் முடிந்த அளவு முக்கிய ஹீரோக்கள் எல்லோரையும் சேமியா ரோலில் நடிக்க வைத்து விட்டார்.

இந்த கான்செப்டில் தமிழ் சினிமாவுக்கு போல் காலடி எடுத்து வைத்தவர் தான் பகத் பாஸில். யாருப்பா இவரு, அட இவர தெரியலையா, இவர்தான் நம்ம நஸ்ரியா வீட்டுக்காரர் என்று தான் அவருடைய அறிமுகம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இருந்தது.

பகத் பாஸில் களம் இறக்கும் மூன்று ஹீரோக்கள்

ஆனால் தன்னுடைய நடிப்பினால் இப்போது நஸ்ரியாவுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்து விட்டது என தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாறி இருக்கிறது. வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்ட். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட பகத் பாசிலுடன் இணைந்து நடித்த ஆசைப்படும் அளவுக்கு அவருடைய ரீச் இருக்கிறது.

ஜெய ஜெய ஹே படத்தின் இயக்குனர் அடுத்து பகத் பாசிலை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் தன்னுடன் இணைந்து நடிப்பதற்காக மூன்று தமிழ் ஹீரோக்களை பரிந்துரை செய்திருக்கிறார் பகத் பாசில்.

இதில் முதலிடத்தில் இருப்பவர் தான் நம்முடைய நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா. உண்மையில் மலையாளத்தில் பகத் எப்படியோ அப்படித்தான் தமிழ் சினிமாவுக்கு எஸ் ஜே சூர்யா. தமிழில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இப்போது தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார் சமுத்திரகனி.

பகத் பாசில் சமுத்திரகனியையும் தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க பரிந்துரைத்திருக்கிறார். முன்னணி ஹீரோக்கள் யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு ஒரு வளர்ந்து வரும் ஹீரோவுக்கு கிடைத்திருக்கிறது.

அதுதான் நம் குட் நைட் பட ஹீரோ மணிகண்டன். மணிகண்டனின் நடிப்பு சமீபத்தில் பகத் பாசிலை ஈர்க்க, அவர் தற்போது தன்னுடைய படத்தில் மணிகண்டன் அடிப்பதற்கு பரிந்துரை செய்திருக்கிறார்.

Trending News