மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பகத் பாசில்(Fahadh Faasil) மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகராக வலம் வரத் தொடங்கி விட்டார். அந்த வகையில் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
அதேபோல் தற்போது தெலுங்கிலும் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மலையாள சினிமாவில் எதார்த்தமான கதைகளில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் பகத் பாசில்.
இவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கிறது. அசால்ட்டான நடிப்புமூலம் எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தூக்கி சாப்பிட்டு விடுகிறார். அது மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களில் பகத் பாசில் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளன.
சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியான ஜோஜி என்ற படமும் செம ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய தொடர் வெற்றிக்கான காரணம் என்ன என்பதை குறிப்பிட்டுள்ளார்.
அதாவது உங்களுக்கு ஒரு ஐடியா பிடித்து விட்டால் அதை தொடர்ந்து செய்யவேண்டும் எனவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால் வெற்றிப் படங்கள் கிடைத்து வருகின்றன எனக் கூறியுள்ளார் பகத் பாசில்.
மேலும் வெற்றி பெற்ற படங்களில் கூட இன்னும் செய்வதற்கு நிறைய இருக்கிறது என தன்னுடைய தன்னடக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் இயக்கும் விக்ரம் படத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.
