திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பகத் பாசிலின் விக்ரம் பட போஸ்டரை வெளியிட்ட படக்குழு.. மனுஷன் வேற லெவல்!

மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பகத் பாசில் சமீபகாலமாக தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றதோடு பல விருதுகளையும் குவித்துள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதிலும், தனது எதார்த்தமான நடிப்பு மூலமும் ஏராளமான ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பகத் பாசில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். மேலும் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவுள்ளது.

தற்போது தமிழில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் பகத் பாசில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிரட்டலான தோற்றத்தில் கமலுடன் பஹத் பாசில் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்நிலையில், இன்று நடிகர் பஹத் பாசில் தனது 39வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் ட்வீட்டரில் #happybirthdayfafa என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

fahad-fazil-vikram
fahad-fazil-vikram

இதனை தொடர்ந்து பகத் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Trending News