Actor Fahadh fasil: மலையாள சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி கதாநாயகனாய் வலம் வந்தவர் பகத் பாசில். மேலும் தமிழ் சினிமாவில், நெகட்டிவ் ரோலில் பட்டைய கிளப்பும் இவர் தொடர் வெற்றியை சந்தித்து வருகிறார். தற்பொழுது படத்தில் இவர் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்ட நிகழ்வை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த படம் தான் மாமன்னன். மேல் சமூகத்தினரால் அடக்கு முறையை எதிர்கொள்ளும் கீழ் சமூகத்தினர் படும் துயரத்தை உணர்த்தும் விதமாய் கதையை அமைந்திருக்கும்.
Also Read: அடி மடியில் கை வைத்த இளம் ஹீரோ.. வாழ்க்கை கொடுத்தவரின் மனைவியுடன் இருந்த கள்ள உறவு
மேலும் இப்படத்திற்குப் பிறகு, நெகட்டிவ் ரோல் ஏற்ற பகத் பாசிலை ஒரு சமூகத்தினர் தூக்கி வைத்து கொண்டாடி வந்தனர். இவர் எங்கு சென்றாலும், அந்த கண்ணோட்டத்தில் இவரை புகழ்ந்து பேசி வருகின்றனர். இதை பிடிக்காது, தற்போது தன்னுடைய முகநூல் பக்கத்தில் நெத்தியடி கொடுத்து வருகிறார்.
இப்படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரம் தோற்றுப் போகப் பட்டதாகவும், கிளைமாக்ஸ் காட்சிகளில் வில்லனாகிய தான் மனம் மாறுவது போலவும் உள்ள போட்டோவை தன் முகநூலில் இருந்து அகற்றி உள்ளார். மேலும் அப்படத்தின் போட்டோக்களை டெலிட் செய்த, வேற ஒரு போட்டோவை தன்னுடைய முகநூல் படமாக மாற்றியுள்ளார்.
Also Read: நின்னு விளையாடிய 6 கேரக்டர் ரோல்.. ரஜினி கதாபாத்திர பெயரை படமாக உருவாக்க வாசு போட்ட திட்டம்
படத்தில் வரும் இந்த மாதிரி கதாபாத்திரத்தை கொண்டாடாதீர்கள். மேலும் நெகட்டிவ் செயல்களுக்கு வழி கொடுக்காதீர்கள் அவை சமூகத்திற்கு தேவை இல்லாத ஒரு ஜென்மங்கள் என்பது போல் உணர்த்தும் விதமாய் தன் முகநூல் போட்டோவை மாற்றி நெத்தியடி கொடுத்து வருகிறார்.
மாமன்னன் பகத் பாசில்:

இவரின் இத்தகைய செயல் அவரின் தன்மையை உணர்த்துவதோடு மட்டுமல்லாது, இதுபோன்ற செயல்படுபவர்களுக்கு பதில் அடி கொடுக்கும் விதமாய் அமைந்து வருகிறது. மேலும் முகநூலில் இவர் மேற்கொண்ட செயல் எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.
Also Read: ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி