செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சிவகார்த்திகேயனுடன் மோத ரெடியாகும் ரத்தினவேலு.. மீண்டும் இணையும் வெற்றி காம்போ

அமரன் படத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் தங்களின் அசாத்திய நடிப்பால் மனதை கனக்க செய்துவிட்டனர். ஒட்டுமொத்தமாக அமரன் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே வந்தன. அதன் காரணமாக இப்படத்தின் வசூலும் அமோகமாக இருக்கிறது. படம் கண்டிப்பாக 300 கோடி வசூல் வேட்டையாடிவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

அமரன் படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். அதனைத்தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார். ஏற்கனவே ஏ. ஆர் முருகதாஸ் படம் துப்பாக்கி படமாக இருக்கும் என்றும், அஜித்தின் குட் பேட் அக்லீ படத்துடன் ரிலீசாக போகிறது என்றும் கூறப்படுகிறது.

இப்படி இருக்க, ஏற்கனவே சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகிறார். சுதா கொங்காரா படம் கண்டிப்பாக கன்டென்ட் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படம் துவங்குவதற்கு இன்னும் டைம் இருக்கும் நிலையில், படத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறார் சுதா கொங்காரா..

சிவகார்த்திகேயனுடன் போட்டி போடப்போகும் ரத்தினவேலு

தற்போது புறநானூறு படம் பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கின்றதாம். முதலில் வில்லனாக லோகியை நடிக்க வைக்கலாம் என்று சுதா கொங்காரா நினைத்துள்ளார். ஆனால் பிசியாக படங்களை இயக்கி வரும், லோகி, கால் சீட் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து பகத் பாசிலிடம் கேட்டுள்ளார் சுதா கொங்காரா. அவருக்கு கதை மிகவும் பிடித்து போய்விட்டது. இருப்பினும், கால் ஷீட் கொடுக்க முடியாத காரணத்தினால், இன்னும் பதில் கூறாமல் இருக்கிறார். ஆனால் படத்தை ஆரம்பிக்க இன்னும் டைம் இருப்பதனால், fafa நடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Trending News