செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

தலைவரை வச்சு Fun செய்த Fahadh.. இந்த காட்சி படத்திலிருந்தால் வேற லெவல் ஹிட் அடித்திருக்கும்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் த. செ.ஞானவேல் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இருந்த படம் வேட்டையன். இப்படம் கடந்த அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் இரு நாட்களில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சமீபத்தில் வெளியாகும் பெரிய ஹீரோக்களின் படத்தில் அதிகமான மாற்று மொழி நடிகர்களை நடிக்க வைப்பது ஒரு வழக்கமாகி வருகிறது. இந்த வழக்கம் விஜய், ரஜினி படங்களில் அதிகமாக உள்ளது. தற்போது வேட்டையன் படத்திலும் அமிதாப் பச்சன், பகத் பாசில் என இரு வேறு மொழி நடிகர்கள் நடித்து இருந்தனர்.

தற்போது, அவர் நடித்து வரும் கூலி படத்தின் கூட அமீர் கான், உபேந்திரா போன்ற நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற படங்கள் இந்த நட்சத்திர பட்டாளம் காரணமாகவே வெற்றியடைவும் செய்கிறது.

தலைவரிடம் Fun செய்த Fahadh

மலையாள நடிகரான பகத் பாசில் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். தமிழ் அல்லது தெலுங்கிலும் புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார். தமிழில் விக்ரம், மாமன்னன் என மாறுபட்ட கதாபாத்திரங்களால் தமிழ் ரசிகர்களின் மனதை வென்று விட்டார் இவரது இயல்பான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

இவருக்கென்று தமிழிலும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. வேட்டையனில் மிகவும் ஜாலியான, காவல்துறைக்கு உதவும் தொழிநுட்பங்கள் தெரிந்த திருடனாக மிரட்டியுள்ளார். அவர் தான் தலைவரை விட ஸ்கோர் செய்திருக்கிறார் என்பது தான் உண்மை. Fahadh இல்லையென்றால் வேட்டையன் இல்லை.

தற்போது ரஜினி மற்றும் பகத் ஆகியோர் இணைந்து நடித்த படத்தில் இடம்பெறாத நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. இதில் பேட்டரியை வேறு ஒருவரிடம் வேலை செய்ய சொல்லி ரஜினி சொல்லும் போது மிகவும் பாசமாக நான் உங்களுக்கு தான் வேலை பாக்குறேன், உங்க டிபார்ட்மெண்ட்க்கு இல்ல. எனக் கூறுகிறார். அதற்கு ரஜினி பேட்டரி சார் நீங்க நல்லா நடிக்கிறீங்க சார் எனக் கூறும் போது உங்கள விடவா என ரஜினியை பகத் கலாய்க்கிறார். இதை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Trending News