திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

எம்ஜிஆர், சிவாஜியால் கிடைத்த புகழ்.. லட்சியத்திற்காக உதறி தள்ளிய நடிகை

MGR-Sivaji: நாடகத் துறையின் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து, தன் நடிப்பினை வெளிக்காட்டிய இரு ஜாம்பவான்கள் தான் சிவாஜி மற்றும் எம் ஜி ஆர். இந்நிலையில் இவர்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகை ஒருவரின் லட்சியம் நிறைவேறியதை குறித்த தகவலை இங்கு காண்போம்.

தன் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாமல் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று மருமகள் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் எல் விஜயலட்சுமி. அதனைத் தொடர்ந்து தமிழிலும், தெலுங்கிலும் எண்ணற்ற படங்களில் நடித்து வந்தார்.

Also Read: எம்ஜிஆர் இடத்தை நிரப்ப, இவரால் மட்டுமே முடியும்.. அடித்து சொன்ன மூத்த தயாரிப்பாளர்

மேலும் பத்மினி, வைஜெயந்தி மாலா போன்றவர்களின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு, முறையாக நடனம் பயின்றார். மேலும் அக்கால பிரபலங்களான எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் , ஜெமினி, முத்துராமன் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறார்.

அவ்வாறு பாதை தெரியுது பார், பொம்மை, ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் இவர் நடிப்பில் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதிலும் இவர் கதாநாயகியாக எம்ஜிஆர் உடன் குடியிருந்த கோவில் என்னும் படத்தில் இடம்பெற்ற ஆடலுடன் பாடலை சேர்த்து ரசிப்பது தான் சுகம் சுகம் என்னும் பாடல் மக்களின் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்தது.

Also Read: அட இந்தப் படத்தின் கதை தான் விக்ரம் திரைப்படமா?.. அட்லீயின் லிஸ்டில் சேர்ந்த லோகேஷ் கனகராஜ்

அதை தொடர்ந்து சிவாஜியுடன் பெற்ற மனம், ஜெய்சங்கர் உடன் வந்தவன் ஒருவன் போன்ற படங்களில் நடித்து அக்காலக்கட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த இவர் தன் சகோதரனின் நண்பனான சூரஜ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சினிமாவை அறவே விட்டுவிட்டு கல்வி மீதான ஆர்வத்தை காட்டினார்.

அதை தொடர்ந்து இவர் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றதால், இவரும் அவருடன் சென்று பட்டம் பயின்று பின் அமெரிக்காவில் சி ஏ ஆடிட்டர் ஆக தன் லட்சியத்திற்கு உயிர் கொடுத்தார். சினிமாவில் ஆயிரக்கணக்கில் வாங்கிக் கொண்டிருந்த இவர் பல லட்சங்களை சம்பாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஹீரோவாக என்ட்ரி கொடுத்த ராகவா லாரன்ஸின் சொந்த தம்பி.. பவர்ஃபுல்லாக இணைந்த கூட்டணி

- Advertisement -

Trending News